திங்கள், 11 மார்ச், 2013

சொத்து பட்டியல் சமர்ப்பிக்காத தமிழக IAS அதிகாரிகள்

 1. அசோக்வரதன் ஷெட்டி
2. என்.எஸ்.பழனியப்பன்
3. ராகேஷ் குமார் யாதவ்
4. ஜி.சந்தானம்
5. மங்கத்ராம் சர்மா
6. சந்தியா வி சர்மா
7. டாக்டர் பி.சந்திரமோகன்
8. வி.ஷோபனா
9. ஏ.சுகந்தி
10. மரியம் பர்ஷானா சாதிக்
11. சந்திர சேகர் சகாமுரி
12. எஸ்.கோபாலசுந்தர ராஜ்
13. ராகுல் நாத் ஏ.ஆர்.
14. விஷ்ணு வி
15. கிருஷ்ணனுன்னி எச்
16. செந்தில்ராஜ் கே
17. ஜி.எஸ்.சமீரன்
18. ஆர்த்தி எம்
19. அமர் குஷ்வாஹா
20. ஸ்ரீதர் பி.என்.
புதுடில்லி:தமிழகத்தை சேர்ந்த, 20 பேர் உட்பட, நாடு முழுவதும், 1,057 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்களின் அசையா சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. நாடு முழுவதும், 6,217 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர்.
இவர்களில், 1,339 பேர், பணி மூப்பு அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம், தங்களின், அசையா சொத்து விவரங்களை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.அந்த வகையில், 2011ம் ஆண்டு, 107, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில், 198 அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டில், மிக அதிகமாக, 1,057 அதிகாரிகள், தங்களின் சொத்து விவரங்களை தெரிவிக்காமல் உள்ளனர். அவர்களில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், 20 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 147 பேர், அருணாச்சல பிரதேசம் - கோவா - மிசோரம் - யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும், 114 அதிகாரிகள் தங்கள் சொத்து விவரத்தை வெளியிடவில்லை. கர்நாடகாவில், 58, ஆந்திராவில், 53, பஞ்சாபில், 48, ஒடிசாவில், 47, மேற்கு வங்கத்தில், 45, இமாச்சல பிரதேசத்தில் 40, அரியானாவில், 35, ஜார்க்கண்டில், 25, குஜராத்தில், 14 என, 1,057 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்கள் அசையா சொத்து விவரங்களை தெரிவிக்காமல் உள்ளனர். இவர்களில், 350 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து குவித்ததால், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, மத்திய பிரதேசத்தை சேர்ந்த, அரவிந்த் மற்றும் தினு ஜோஷி தம்பதியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக