திங்கள், 11 மார்ச், 2013

கொல்கத்தாவுக்கு கடத்தப்பட்ட 168 குழந்தை தொழிலாளர்களை மீட்பு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து கொல்கத்தாவிற்கு குழந்தை தொழிலாளர்களை ரயில் மூலம் ஒரு கும்பல் கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து, அஜ்மீர் - சியல்டா எக்ஸ்பிரஸ் ரயிலை போலீசார் சோதனையிட்ட போது 5 வயதிலிருந்து 12 வயதிற்குட்பட்ட 168 குழந்தை தொழிலாளர்களை கொல்கத்தாவிற்கு ஒரு கும்பல் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.ஜெய்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வளையல் தொழிற்சாலைகளில் முன்னர் வேலை பார்த்து வந்த இவர்களுக்கு கொல்கத்தாவில் அதிக சம்பளம் பெற்றுத் தருவதாக கூறி கடத்திச் சென்ற 12 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக