வெள்ளி, 8 மார்ச், 2013

சுப்ரமணியம் சுவாமி இன்று வாஷிங்டனில்! இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி ஆலோசனை!!

இது கடந்த ஆண்டு ஜூலையில் எடுக்கப்பட்ட போட்டோஐ.நா. மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள தீர்மானம் இன்னமும் முழுமை பெறவில்லை என்றே தெரிகிறது. இந்த நேரத்தில், வாஷிங்டன் சென்று இறங்கியுள்ளார், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி. கடந்த வாரம் கொழும்பு சென்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்த சுவாமி, நேற்று முன்தினம் மாலை, அமெரிக்கா நியூயார்க் ஜே.எஃப்.கே. விமான நிலையத்தில் போய் இறங்கினார். அவருக்கு நெருக்கமான இருவர், அவரை வரவேற்க வந்திருந்தனர். மறுநாள் காலை வாஷிங்டன் வந்தடைந்த சுவாமிக்கு, அமெரிக்க நிர்வாகத்தில் இரு முக்கிய அதிகாரிகளை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. சுப்ரமணியம் சுவாமியின் அமெரிக்க பயணம் தொடர்பாக விறுவிறுப்பு.காமுக்கு கிடைத்த தகவல்கள்: இது கடந்த ஆண்டு ஜூலையில் எடுக்கப்பட்ட போட்டோ

சுப்ரமணியம் சுவாமி சந்திப்பதற்கு, அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட்டால் அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்த இரு அதிகாரிகளும், அமெரிக்காவின் தென் ஆசிய விவகாரங்களை கவனிக்கும் உயரதிகாரிகள். இருவருடனும், இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானங்கள் பற்றியே சுவாமி உரையாடியதாக தெரிகிறது. சுவாமி அமெரிக்கா வரும் முன்னரே, இந்த அப்பாயின்ட்மென்ட்கள் உறுதி செய்யப்பட்டிருந்தன. சுவாமி சந்தித்த இருவரும், அமெரிக்க தரப்பில் இலங்கை தொடர்பான விவகாரங்களை கவனிப்பவர்கள். (மேலேயுள்ள போட்டோவில் உள்ளவர்கள்) இருவரில் ஒருவர், இலங்கை தொடர்பான கொள்கை முடிவுகளை பரிந்துரைக்கும் அந்தஸ்தில் உள்ளவர்நேற்று காலை சுப்ரமணியம் சுவாமி சந்தித்த அமெரிக்க உயரதிகாரி, டாக்டர் அலிசா அய்ரெஸ் (Dr. Alyssa Ayres) கடந்த ஆகஸ்ட் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இவர் வகிக்கும் பதவி, Deputy Assistant Secretary for South and Central Asia.
இவரது அலுவலகம், இந்தியா, நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், மாலதீவு ஆகிய நாடுகளின் அமெரிக்க வெளியுறவு கொள்கைகளுடன் டீல் பண்ணுகிறது. நேற்று (வியாழக்கிழமை) காலை சுப்ரமணியம் சுவாமி இவருடன் சுமார் 45 நிமிட சந்திப்பை மேற்கொண்டார்.
அதன்பின் நேற்று மாலை சுவாமி சந்தித்த நபர் மிக முக்கியமானவர். அவர், ராபர்ட் ஓ. பிளேக் (Robert O. Blake). இவர் இலங்கை தொடர்பான கொள்கை முடிவுகளை பரிந்துரைக்கும் அந்தஸ்தில் உள்ளவர். இவர்தான் அமெரிக்காவின் Assistant Secretary of State for South and Central Asian Affairs.
இலங்கை விவகாரத்தில் இவர் மிகவும் பரிச்சயம் உடையவர். எப்படியென்றால், இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்தவர், சாட்சாத் இவரேதான்!
அந்த விதத்தில், இலங்கை ஜனாதிபதியில் இருந்து, இலங்கை வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள்வரை பலரை நேரில் அறிந்தவர்.

நேற்று மாலை, சுப்ரமணியம் சுவாமி இவரை சந்திப்பதற்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தது, அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட். அந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
விறுவிறுப்பு.காமுக்கு கிடைத்த தகவலின்படி, சுவாமியின் பயணத்துக்கான விமான டிக்கெட் அமெரிக்க அரசாலேயே வழங்கப்பட்டிருந்தது. அந்த டிக்கெட்டின் படி, இன்று மாலை (வெள்ளிக்கிழமை) அவர் அமெரிக்காவில் இருந்து திரும்ப வேண்டும். ஆனால், அவரது பயணம் நாளைக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இதனால், இன்று அவர் வேறு யாரையாவது சந்திக்க உள்ளாரா என்பது தெரியவில்லை.
இந்த செய்தி எழுதப்படும்போது, வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை, அதிகாலை 1 மணி. இன்றைய தினம் வேறு யாரையாவது ஸ்டேட் டிபார்ட்மென்டில் சந்திக்கிறாரா என்பது, வாஷிங்டன் நேரம் 10 மணிக்கு பின்னரே தெரியவரும். தெரியவந்தால், வெளியிடுவோம்.
இலங்கை விவகாரம் தொடர்பாக சுவாமி அப்படி என்னதான் செய்கிறார் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள இன்னும் ஓரிரு தினங்கள் ஆகலாம்.    

-வாஷிங்டனில் இருந்து Renata Modana, நியூயார்க்கில் இருந்து  ரவி ஆகியோரின் குறிப்புகளுடன், விறுவிறுப்பு.காமுக்காக ரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக