வெள்ளி, 8 மார்ச், 2013

கிராம மோதல் கதையில் Bindu Madhavi

இரண்டு கிராமங்களின் மோதல் கதையாக உருவாகிறது ‘தேசிங்கு ராஜா‘. இப்படம் பற்றி இயக்குனர் எழில் கூறியதாவது: ‘மனம் கொத்திப் பறவை‘ படத்துக்கு பிறகு இயக்கும் படம் ‘தேசிங்கு ராஜா‘. கிராமங்களுக்கு இடையே கலவரம் என்பது அந்த காலந்தொட்டு நடந்து வருகிறது. சமீபத்தில்கூட இதுபோன்ற பயங்கரம் நடந்தது. இப்படத்தின் கதையை பொறுத்தவரை காதல் மையப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் கோபம், பகையால் இளம் ஜோடிகளின் காதல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கூறுகிறது படம். அத்துடன் குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவையும் சம விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. விமல் ஹீரோ. பிந்து மாதவி ஹீரோயின். சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவி மரியா, நரேன் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. டி.இமான் இசை. மதன் வழங்க உமா மகேஸ்வரி தயாரிப்பு. கீவளூர், திட்டச்சேரி, கயத்தார், காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக