வெள்ளி, 8 மார்ச், 2013

30 லட்சம் விவகாரம் : ‘கூடங்குளம்’ உதயகுமார் விளக்கம்

 கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் குமார். இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் குமார் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஆல்லைன் மூலம் 29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது.அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவரின் மனைவியின் கணக்கிற்கு இவ்வளவு பணம் ஒரே நேரத்தில் வந்ததால், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து வங்கியின் அதிகாரிகள், அம்பிகா மற்றும் அவரது கணவர் குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிய ஆனந்த் பற்றியும், எதற்காக அதிக அளவு பணத்தை மொத்தமாக அனுப்பினார்? என்றும் விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்து வருமான வரித்துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையமும் விசாரணையில் இறங்கியது. அம்பிகாவிற்கு லண்டனில் இருந்து வந்த பணத்தை, அவருக்கு பட்டுவாடா செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.இதுதொடர்பாக குமார் கூறும்போது, “எனது மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியது எனது நண்பர் ஆனந்த். குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறேன்.ஆகையால் நிலம் வாங்குவதற்காக ஆனந்த் எனது மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினார். அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கும், இந்த பணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது தொழிலை முடக்கி என்னை பழி வாங்குவதற்காக போலீசார் வதந்தியை பரப்பியுள்ளனர் என்றார். நம்பிட்டோம் நம்பிட்டோம் நல்லாவே நம்பிட்டோம்   nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக