செவ்வாய், 5 மார்ச், 2013

நோர்வேயை விட்டு வெளியேறி வரும் வெளிநாட்டு பெற்றோர்கள்

நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும் பகுதி பகுதியாகவும் நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 முதல் 35 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்தவர்கள் கூட தற்போது நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்களான ஆப்டன் போஸ்ட், என்.ஆர்.கே உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெளியேறுபவர்கள் இந்தியா,இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை அண்டிச்செல்வதாகவும் கூறப்படுகிறது.
நோர்வேயில் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்கள் சிறுவர் நலன் பேணல் என்ற காரணத்தைக்காட்டி வெளிநாட்டு வதிவிட வாளர்களின் குழந்தைகளை கடத்தல் முறையில் திட்டமிட்ட வகையில் பெற்றோரிடமிருந்து பிரித்து செல்கின்றமையால் அங்கு வாழ்கின்ற வெளிநாட்டு பெற்றோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையிலேயே நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் குடும்பம் குடும்பமாக பிற நாடுகளை நாடிச்செல்கின்ற அதேவேளை வேறுசிலர் தமது பிள்ளைகளை பிறநாடுகளில் வாழ் தமது உறவினர்களிடம் ஒப்படைத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.
அத்துடன் மனைவி குழந்தைகளையும் பிறநாடுகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு கணவன் மாத்திரம் நோர்வேயில் தங்கியிருக்கின்ற நிலைமையும் அதிகரித்து வருவதாக தெரிய வருகின்றது.
இது இவ்வாறிருக்க நோர்வேயின் சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் சர்வதேசத்தின் முன்னிலையில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நோர்வே அரசாங்கம் தந்போது சிறுவர் விவகாரம் தொடர்பில் அந்நாட்டு சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆலோசித்து வருவதாகவும் அத்திட்டத்தை ஜெனீவா பேரவையில் முன்வைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
எப்படி இருப்பினும் நோர்வே சிறுவர் காப்பக விவகாரத்தினால் நோர்வே அரசாங்கம் ஐ.நா.சபை மற்றும் சர்வதேச நாடுகளின் நன்மதிப்பினை இழந்துள்ளதாகவும் இழந்துள்ள தன் நாட்டு கௌரவத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் சிறுவர் காப்பகங்களினால் பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நோர்வே சிறுவர் காப்பகங்களால் தமது பிள்ளை பலவந்தமாக பிரித்து எடுத்துச் செல்வதன் மூலம் தமக்கிடையிலான உறவு-கலாசார பின்னணி என சகல விடயங்களும் மறக்கடிக்கப்படுகின்ற அதேவேளை ஒரு சிறுவர் சிறுவர் சிறை வாழ்க்கை முறையை அங்கு பெற்றுக்கொடுக்கப் பட்டிருக்கின்ற உணர்வு எழுகின்றது. என அங்கலாய்க்கப்படுகிறது.
சிறுவர் காப்பகங்களில் தவறுகள் இடம்பெற்றிருப்பதாக நோர்வே அரசே ஒப்புக்கொண்டு செய்திகள் வெளியிடுகின்ற நிலையில் இது தொடர்பில் உலக நாடுகள் தலையீடு செய்ய வேண்டும் என்பதும் நோர்வே அரசு மற்றும் நோர்வே சிறுவர் காப்பகங்கள் ஆகியவற்றின் பிடியில் இருந்து தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறும் தமது பிள்ளைகளின் ஏக்கங்களைத் துடைக்குமாறும் ஜெனீவா பேரவையிடமும் கோரிக்கை விடுப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் கேட்டு நிற்கின்றன. வெளிநாட்டு பெற்றோர்கள் 
பலவந்தமாக தூக்கிச் செல்லப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான திட்டமோ அல்லது இவ்விடயத்தில் ஒரு நிகழ்ச்சி நிரலோ கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாடாகும்.
தமது குழந்தைகள் தம்மிடத்தில(பெற்றோரிடத்தில்)வந்து சேர்வதற்கு ஆவலாக இருந்தும் அந்த குழந்தைகளின் சிறுவர்களின் உரிமைகளை நோர்வே அரசு மதிக்கத்தவரிவிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.நடைபெற்றுக்கொன்டிருக்கும் ஜெனீவா பேரவையில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக