புதன், 6 மார்ச், 2013

Hugo Chavez வெனிசுலா அதிபர் சவேஸ் காலமானார்

கார்கஸஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58). புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.கடந்த ஆண்டு டிசம்பரில் கடைசியாக சிகிச்சைக்காக கியூபா சென்று பின்னர் நாடு திரும்பியநிலையில் கடந்த இரு நாட்களாக சவேசிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. வெனிசுலாவில் உள்ள ஈர்னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். சவேஸ் காலமானதை துணை அதிபர் நிக்கோலஸ் மௌர்டோவும் அந்நாட்டு டி.வி. வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். கடந்த 14ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சவேஸ் மறைவிற்கு தென்அமெரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.புரட்சியாளரான சவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார். ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார்.பின்னர் தனது திறமையால் வெனிசுலா அதிபராக கடந்த 1999-ம் ஆண்டு பொறுப்பேற்றார். சாகும் வரை அதிபராகவே சவேஸ் காலமானது அந்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக