வியாழன், 28 மார்ச், 2013

சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்?

 இந்த பத்திரிகை போராளிகள் சக பத்திரிகையாளரான அகிலாவுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்கோ, சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்? ஈழத்திற்காக மாணவர்கள் போராடும் இந்தக் காலத்தில்அகிலாவிற்காக ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தாதது ஏன்?
ன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தை அவசியம் கருதி இங்கே தனிப்பதிவாக வெளியிடுகிறோம். இவர் ஒரு பெண் பத்திரிகையாளர். பொறுக்கி ராஜாக்களால் ஊடகத்துறையில் வளர முடியாமல் மட்டுமல்ல, தொடர்ந்து செயல்பட முடியாமலேயே துரத்தப்பட்டவர்களில் ஒருவர். இன்றைக்கு அகிலா துணிந்து போராடி வருவதிற்கு பின்னே நியாயம் கிடைக்காத பல பெண் பத்திரிகையாளர்களின் கதை மறைந்திருக்கிறது.
வினவின் கட்டுரையை சில ஆயிரம் பேர் படித்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில விதிவிலக்குகளைத்  தவிர பத்திரிகையாளர்களிடமிருந்து திட்டமிட்ட மௌனத்தையே காண்கிறோம். பலர் முகநூலில் அமெரிக்கா முதல் ஈழம் வரை அனைத்தையும் விமரிசிக்கும் போராளிகளாக வலம் வருகின்றனர். வெள்ளியன்று ரிலீசாகும் படங்களுக்கு வியாழனன்றே விமரிசனங்கள் எழுதுகின்றனர். கட்சி சார்பாகவோ இல்லை கருத்து சார்ந்தோ பகிரங்கமாக விவாதிப்பவர்களாகவும் காட்டிக் கொள்கின்றனர். பத்திரிகையாளர்களே அகிலாவின் பிரச்சினைக்காக அமைதி காக்கிறார்கள்  என்றால் இவர்கள் வேலை செய்யும் தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இந்த பத்திரிகை போராளிகள் சக பத்திரிகையாளரான அகிலாவுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்கோ, சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்? ஈழத்திற்காக மாணவர்கள் போராடும் இந்தக் காலத்தில்அகிலாவிற்காக ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தாதது ஏன்? தமது பத்திரிகைகளில் செய்தி வருமாறு குரல்கொடுக்காதது ஏன்?
நேற்று சன் டிவியிலிருந்து அகிலா தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.விசாரணை இனிமேல்தான் நடக்குமாம். ஒரு பொறுக்கியை எதிர்த்துப் போராடிய பெண்ணுக்கு சன் டிவி அளித்திருக்கும் பரிசு இது.
பத்திரிகையாளர்களே, பதிவர்களே இன்னும் அமைதி காக்கதீர்கள்.
பேருந்தில் வைத்து ஒரு பெண்ணை  பலரும் வல்லுறவுக்கு ஆளாக்குவது மட்டும்தான் பாலியல் வன்முறையா?
இதோ பெயர் வெளியிட விரும்பாத இந்த பெண் பத்திரிகையாளர் கேட்கிறார். பதில் சொல்லுங்கள்!
ஊடக உலகில் நிலவும் இத்தகைய வன்முறைகளை எதிர்ப்பதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அகிலாவுக்கு தேவையான ஆதரவை வழங்குவோம். அவரது போராட்டத்திற்கு துணை நிற்போம்!
- வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக