திங்கள், 4 மார்ச், 2013

இயக்குனர் பாலா: குறை தீர்த்து களை எடுக்கிறேன் அதனால் பயிர் தனியாக தெரிகிறது.



பாலா படத்திற்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாலா கையில் எடுக்கும் கதைக்களமும் திரையில் காட்டும் கதாபாத்திரங்களும் உண்மையையும், உள்ளதை உள்ளபடியேவும் பிரதிபலிப்பன.

எனவே தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் பாலாவின் படத்தில் நடிப்பதற்காக காத்து கிடக்கின்றனர். அந்த வரிசையில் தானாக முன்வந்து பாலாவின் ஹீரோ லிஸ்டில் தனது பெயரை பதிவு செய்தவர் நடிகர் விஜய். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது “பாலா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” என்று சொன்னார்.>இதுபற்றி சமீபத்தில் ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாலா “ என் இயக்கத்தில் நடிக்க ஏன் ஆசைப்படுகிறார்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என் படத்தில் நடிக்க வந்தால் சிறந்த நடிகனாக வர வாய்ப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். அனால் நான் அப்படி நினைக்கவில்லை. பொதுவாக நடிகர்களை நான் நடிக்க வைப்பதில்லை.அவர்களது நடிப்பில் இருக்கும் குறைகளை மட்டுமே நீக்குவேன். குறைகளை நீக்கிவிட்டால் அவன் முழுமையான நடிகனாகிறான். நான் ஹீரோக்களுக்கு இதை இதை சொல்லி கொடுத்தேன், நான் போட்டுக்கொடுத்த பாதையில் செல்கிறார்கள் என்றேல்லாம் சொல்லிக் கொள்ள எனக்கு தகுதியே கிடையாது. அவர்களின் குறை தீர்த்து களை எடுக்கிறேன். அதனால் பயிர் தனியாக தெரிகிறது. இது என்ன கம்பசூத்திரமா?” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக