செவ்வாய், 5 மார்ச், 2013

கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கும் லண்டன் புதுமைப்பெண்

லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன், ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.லண்டனில், தனியார் நிறுவனம் ஒன்றில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுபவர், மரியா பட்ஸ்கி, 33. இவருக்கும், பால், 37, என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி, 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீட்டர், 33, என்பவருக்கும், மரியாவுக்கும், காதல் ஏற்பட்டுவிட்டது. கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது, ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த நிலையில், என் மனதில் திடீரென பீட்டர் நுழைந்துவிட்டார். இருவரையும் மறக்க முடியாமல் தவித்த நான், ஒரு கட்டத்தில், பீட்டருடன் சென்றுவிட்டேன். ஓராண்டு வரை, அவர் வீட்டில் நாங்கள் வசித்தோம். தினமும் எனக்கு, என் கணவர் பால் மற்றும் குழந்தைகள் நினைவு வாட்டி எடுத்தது. குழந்தைகளும் என்னை காணாமல் அழுதன. இதனால், கணவர் மற்றும் குழந்தைகளை சந்திக்க அவ்வப்போது வந்து சென்றேன்.இப்படியே, அங்கும், இங்குமாக ஓராண்டு நகர்ந்தது. அதற்கு பிறகு, மூன்று பேரும் ஒரு நாள் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம். முதல் சந்திப்பிலேயே, பீட்டரும், பாலும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இது எனக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. மூவரும் ஒரே வீட்டில் ஏன் வசிக்க கூடாது என, விவாதித்தோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது என, பேசி முடிவு செய்தோம். அதை, குழந்தைகளும் ஏற்றுக்கொண்டன. ஓராண்டாக கணவர் பால், காதலர் பீட்டர், குழந்தைகளுடன் நான் ஒரே வீட்டில் உள்ளேன்; எங்களுக்குள் எந்த பிரச்னையும் இதுவரை இல்லை. படுக்கையை மூவரும் ஒன்றாக பகிர்ந்து கொள்வதில்லை. பீட்டர் இருக்கும் போது, பால் வருவதில்லை; பால் இருக்கும் போது பீட்டர் வருவதில்லை.பிறருக்கு வினோதமாக தெரியும் எங்கள் வாழ்க்கை, எங்களுக்குள் நல்ல சுமூகத்தையும், புரிதலையும் கொடுத்துள்ளது. பால், பீட்டர் இருவரும், என் குழந்தைகளை கண் போல பார்த்து கொள்கின்றனர். என்னையும், அவர்கள் இருவரும் தரையில் விடுவதில்லை. இது போன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த பெண்ணுக்கும் வாய்க்காது. இவ்வாறு, மரியா கூறியுள்ளார் dinamalar,com   நம்ம நாட்டில் அஞ்சுக்கு ஒன்னு புனிதமா இருக்கும் போது ரெண்டுக்கு ஒன்னு தப்பில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக