செவ்வாய், 5 மார்ச், 2013

2 nd House உங்கள் வார்த்தைகள் எப்படி உங்கள் விதியை உருவாகுகிறது

 நாம்  மாறாதவரை எமது கர்மாவும் மாறாது நாம் மாறினால்தான் எமது கர்மாவும் மாறும்
 எமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் எமது வாழ்க்கை என்ற   மாளிகையில் அடுக்கப்படும் செங்கற்களாகும்.
அந்த மாளிகை அழகான உறுதியான மகிழ்ச்சியான மாளிகையா என்பது நாம் சதா பேசும் சொற்களும் தான் தீர்மானிக்கின்றன.
அடிப்படையில் ஒன்பது கிரகங்கள் பன்னிரண்டு வீடுகளில் இருக்கும் நிலையை ஆதாரமாக  கொண்டு சோதிடகலை உருவாகி உள்ளது.
இது மட்டுமல்லாது கைரேகை சாஸ்திரம் கையில் உள்ள ரேகைகளை கொண்டு பலாபலன்களை கண்டு பிடிக்க உதவுகின்றது
உடலின் தன்மைகளையும் குறிப்பாக முகத்தின் அங்க குறியீடுகளையும் கொண்டு பலாபலன்களை அறிவது சாமுத்திரிக்கா லட்சணம் எனப்படுகிறது.
இன்னும் பலபல விதமான வகையிலான சோதிட முறைகள் உள்ளன. 
இவையெல்லாம் பலன்களை அறிய மட்டுமே உதவும் விஞ்ஞானமாகும்
ஆனால் நாம் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் வெறுமே பலன்களை அறிவதற்கு மட்டுமே இந்த கலைகள் உருவாக வில்லை
நாம் விரும்பும் விளைவுகள எமது வாழ்வில் நாம் எப்படி பெறலாம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். முதலில் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டை பார்ப்போம். இதை பொதுவாக வாக்கு ஸ்தானம் என்பர் . எமது வாக்கு வல்லமை எப்படி உள்ளது ? மிகவும் அழகாக பேச தெரிந்தவர்களா? அல்லது வெறும் குண்டக்க மண்டக்க என்று குழப்பி அடிப்பவர்களா ?
எடுத்துக்கொண்ட விஷயத்தை சரியாக எதிராளிக்கு விளங்கக்கூடியதாக அவரால் ஏற்றுக்கொள்ள கூடியதாக எம்மால் பேச முடிகிறதா அல்லது எதிராளியை வெறுப்பேற்றி அவரை எமது வாக்கினாலேயே எதிரியாக்கி விடுகிறோமா?
இதுபோன்ற எமது பேச்சு இயல்புகளை காட்டுவதில் இரண்டாம் இடத்திற்கே பெரும் பங்கு இருக்கிறது .
இனி மிகவும் சுவாரசியமான  ஒரு  பிரபஞ்ச ரகசியத்தை ஆராய்வோம்.
இதே இரண்டாம் இடம்தான் நமது குடும்ப வாழ்க்கையையும் எமது குடும்ப நிதி நிலையையையும் மட்டுமலாமல் எமது முக வசீகரத்தையும்    பொதுவில் தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியையும் குறிப்பதில் இந்த இரண்டாம் வீடு முக்கியமானது.
இதில் எந்த கிரகங்கள் இருப்பது நல்லது எப்படிப்பட்ட கிரகங்கள் எப்படி பட்ட பலத்தோடு இருப்பது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று விளங்க முயற்சிப்பது பாரம்பரிய சோதிட விஞ்ஞானமாகும் .
நான் இங்கு அவற்றை எழுதி உங்களை  சோதிட கடலில் தள்ளி விட விரும்பவில்லை .அது எனது நோக்கமும் அல்ல.
இந்த கிரஹங்களும் அவை அமர்ந்து இருக்கும் வீடுகள் என்பவையும் ஒரு அட்டவணை போன்றவைதானே அன்றி அவற்றை எல்லாம் நாம் படித்து தான் எமது தலை எழுத்தை மாற்ற வேண்டுமோ என்று யாரும் பயப்படத்தேவை இல்லை .
உங்கள் தலை எழுத்தை மாற்றி அமைக்கும் சமாசாரம்  உண்மையில் மிகவும் தெளிவானது ஆனால் அதை செயல் முறையில் கொண்டு வருவதற்கு மிக உறுதியான நோக்கமும் தளராத தன்னம்பிக்கையும் மிகவும் நுட்பமாக வாழ்வை அவதானிக்கும் போக்கும் மிக மிக அவசியமானது.
நாம்தான் அடிப்படியிலேயே சிந்திப்பதற்கு சோம்பல் படும் மனிதர்களாகி விட்டோம்.
எமது பாரம்பரிய சமய கலாசார நம்பிக்கைகள் அல்லது பழக்க வழக்கங்கள் எல்லாமே எம்மை எதையுமே சுயமாக சிந்திக்க விடாமல் வெறுமனே எதையாவது பின்பற்றி அறிவுக்கண்ணை முடிகொண்டு இருட்டில் நடப்பதே சுகம் என்று வாழ்ந்து பழகிவிட்டோம்.
கிரக நிலையில் இரண்டாம் வீட்டுக்கு உரிய கிரகப்படியே உங்கள் வார்த்தைகளும் அமையும் அதுபோலவே தான் உங்கள் வாழ்க்கையும் அமையும் .
சரி ஒரு மோசமான கிரக சேர்க்கை இரண்டாம் வீட்டில் அமைந்து விட்டது அதன் காரணமாக உங்கள் வார்த்தைகள் எல்லாமே சதா கலகம் விளைவிப்பவையாக இருக்கின்றனவே என்ன செய்வது
இருப்பினும் நான் புத்தியாக நடந்து நான் உண்டாக்கும் கலகங்களால்   நான் பாதிப்படையாமல் இருக்கும்  வரையில் சரிதான் என்ற மனோபாவம் இருந்தால் அதை முதலில் மாற்றி கொள்ள வேண்டும் .
நமது ஒவ்வொரு வார்த்தைகளும் பௌதிக ரசாயன சக்தி வாய்ந்தவை என்பது நினைவிருக்கட்டும். எமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் எமது வாழ்க்கை என்ற   மாளிகையில் அடுக்கப்படும் செங்கற்களாகும்.
அந்த மாளிகை அழகான உறுதியான மகிழ்ச்சியான மாளிகையா என்பது நாம் சதா பேசும் சொற்களும் தான் தீர்மானிக்கின்றன.
 எப்படி இரண்டாம் வீட்டில் நல்ல சுப கிரக சேர்க்கை இருந்தால் நல்ல சொற்களே   வாயிலிருந்து  வருவது போல... நல்ல வாழ்வே எமக்கு வாய்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை  .
இந்த உண்மை எவ்வளவு நிச்சயமானதோ அதே அளவு நிச்சயமானதுதான்.
எப்படி நாம் நல்ல சொற்களே சொல்லி கொண்டிருந்தால் இரண்டாம் வீட்டில் இருக்கும் தீய கிரகமும் நல்ல கிரகமாகி விடும்... நல்ல வாழ்வும்  அமைந்தும் விடும்.
 எமது வாயினால் செய்யகூடிய நல்ல ஒரு காரியம் பாடுவதாகும். பிறருக்கு வீண் தொந்தரவு தாராத விதத்தில் நன்றாக ரசித்து அனுபவித்து பாடினால் அதன் பாசிடிவ் பலன்கள் நிச்சயமாக ஜாதகத்தில் உள்ள இரண்டாம் வீட்டை மேம்படுத்தும் இது மிக நிச்சயமான நிருபிக்கப்பட்ட உண்மை. இதில் நாம் கவனிக்க வேண்டுவது என்னவென்றால் பிறருக்கு காட்டுவதற்காக அல்லது ஏதோ கடன்வழிக்கு கோயில் தேவாரம் போன்று பாடுவது ரசனை இல்லாத ஒரு தொந்தரவாக இருக்கும் பட்சத்தில் அது எதிர்பார்ற்கும் நல்ல பலனை தராது . மாறாக எதிர்மறையான விளைவுகளுக்கும் காரணமாகி விடக்கூடும்.
சினிமா பாடலாயினும் அல்லது நல்ல சந்கீதமாயினும் சரி ரசித்து அனுபவித்து பாடி வந்தால் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில்  உள்ள பல தோஷங்கள் நீங்கிவிடும்
 அடுத்த முக்கியமான விவகாரம் உணவு. பிறருக்கு நல்ல உணவை முகம் கோணாமல் மனம் அறிந்து வழங்கி வந்தால் அதுவும் நல்ல தோஷ நிவர்த்தியே. இன்னும் சரியாக சொல்லபோனால் ஆடு மாடு நாய் பூனை போன்ற சகல ஜீவராசிகளையும் போஷித்து வந்தாலும் அவற்றின் உணர்வுகள் எங்கள் ஜாதகத்தில் நல்ல கிரடிட்டுக்களை அள்ளி சேர்க்கும்

உண்மையில் இது தான் உண்மையான கிரக சாந்தி அல்லது கிரக தோஷ நிவர்த்தி என்றும் கூறலாம் .
இந்த உண்மை தெரியாமல் வீணே போலி சோதிடர்களின் சொற்களை கேட்டு கிரக பரிகாரம் என்று காசை வீணடித்தால் ஒரு பிரயோசனமும் வராது.
நாம் செய்த கர்மாவை நாம் மாற்றவேண்டும் என்றால் அதே கர்மாவை நாம் தான் திருத்த வேண்டும்
 நாம்  மாறாதவரை எமது கர்மாவும் மாறாது நாம் மாறினால்தான் எமது கர்மாவும் மாறும்
எமது கர்மாவை அய்யர் மாற்றுவார் அல்லது சாமியார் மாற்றுவார் என்று சோம்பல் தனமாக காசை விட்டெறிந்து குறுக்கு வழியில் பிரபஞ்சத்தை ஏமாற்றி விடலாம் என்று எண்ணுகிறோம்.
உங்கள் வாய் எப்படி உங்கள் விதியை உருவாகுகிறது
எமது கர்மா எமது வாழ்வின் ஏதோ ஒரு காரண காரியத்திற்காக உருவாக்கி உள்ளது .
அது எமக்கு உகந்ததாக இல்லை என்று நாம் எண்ணினால் அது  ஏன் எமக்கு உகந்தது இல்லை என்ற புரிதல் முதலில் வேண்டும் .
அதன் பின் நாமே அந்த கர்மாவின் காரண காரியங்களையும் அதன் முடிவான நோக்கங்களையும் ஆராய வேண்டும் .
அப்பொழுது நாமே ஓரளவு சரியான தீர்மானத்திற்கு வந்து விடுவோம் .
நாம் சரியான தீர்மானத்திற்கு வந்த பின்பு அதை நோக்கி நாம் கருமமாற்ற வேண்டும்.
அதற்கு சோதிடம் நிச்சயமாக உதவி செய்யும்.
நான் மேலே குறிப்பிட்ட இரண்டாம் வீட்டு பலன் போன்று  இன்னும் எராளமான விடயங்கள் உள்ளன. இது ஒன்றும் இலகுவான கல்வி அல்ல பலரும் மீண்டும் மீண்டும் ஆய்ந்து பல உண்மைகளையும் நல்ல கருத்துக்களையும் மக்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் .
வாழ்வின் சகல பிரச்சனைகளுக்கும் நிச்சயமான வழிமுறைகள் உள்ளன.
நாம்தான் நீண்ட காலமாக இந்த விடயத்தில் இருட்டில் இருந்து விட்டோமே.
சோதிடக்கலை பெரும்பாலும் மக்களை இருட்டில் வைத்திருந்து பணம் பறிப்பதற்கே பயன் பட்டுவிட்டது. quastrology.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக