வியாழன், 28 பிப்ரவரி, 2013

Ragini nandwani விஜய் படத்தில் பாலிவுட் நடிகை

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய், அமலாபால், சந்தானம், சத்யராஜ் என ஒரு பலமான கூட்டணியுடன் மும்பையில் நடந்துகொண்டிருக்கிறது தலைவா படப்பிடிப்பு. தலைவா திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், படக்குழுவில் பாலிவுட் நடிகையை சேர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய். இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த ராகினி நந்த்வானி சமீபத்தில் தான் டேராடூன் டைரி என்ற இந்தி படத்தில் நடித்தார். முதல் திரைப்படத்தில் நடித்ததுமே கோலிவுட்டின் முன்னணி கதாநாயகனின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது ராகினிக்கு. தலைவா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பல தேர்வுகளுக்குப் பின் ராகினியை தேர்ந்தெடுத்திருக்கிறாராம் ஏ.எல்.விஜய். 
தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் விளைவாக எந்தக் காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டு அமர்ந்துகொள்கிறாராம் ராகினி. ஒரே ஒரு படத்தில் நடித்திருப்பதால் படப்பிடிப்பின் போது சிரமமாகும் என கணக்கு போட்டு வைத்திருந்த இயக்குனருக்கும், படக்குழுவினருக்கும் ராகினியின் திறமை பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
தலைவா படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கலாக நடித்து அமலாபால் பெற்ற பாராட்டுகளை வந்த சில நாட்களிலேயே வாங்கிவிட்டாராம் ராகினி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக