திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஜெயலலிதா நினைத்தால் சீனாவின் வல்லரசு கனவு டமால் வைகை செல்வன் DAMN SERIOUS!

Viruvirupu “இந்தியா வல்லரசு நாடாக மலர வேண்டும் என்றால், இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா வரவேண்டும்” என்று முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு பேசியிருக்கிறார், தமிழக அரசு தலைமை கொறடா வைகைச்செல்வன். “ஒட்டு மொத்த இந்திய மக்களும், ஜெயலலிதா பிரதமராக வருவதை தான் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றார்கள்” என்றும் ஒரே போடாக போட்டிருக்கிறார் இவர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் ஒற்றுமை திடலில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் கபடி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளரும், தமிழக அரசு தலைமை கொறடாவுமான வைகைச்செல்வன் இதில் கலந்துகொண்டு பேசியபோதே, இந்தியாவுக்கு இருக்கும் அரிய பெரிய வாய்ப்பு பற்றி தெரிவித்தார்.
வைகைச்செல்வன் பேசும்போது, “விளையாட்டு மூலம் பல சாதனை புரிய முடியும். விளையாட்டு துறை மூலம் இளைஞர்களை கவர்ந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார் சரத்பவார். தமிழகத்தில் விளையாட்டு துறைக்கு தான் அதிக அளவு நிதி ஓதுக்கிடு செய்து சாதனை புரிந்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழகத்தில் செயல்படுத்தி வரும் விலையில்லா மடிக்கணினி திட்டத்தை பின்பற்றி உத்திரபிரதேச முதல்வர் ஆனார் அகிலேஷ் யாதவ். தமிழகத்தின் எண்ணற்ற திட்டங்களை மற்றைய மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றனர். (“இந்தியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன என்று முதலில் சொல்லும் பார்க்கலாம்” என்று கூட்டத்தில் யாராவது கேட்டிருந்தால், சிக்கியிருப்பார் வைகை அண்ணாச்சி)
தமிழகத்தின் வரைபடமாக திகழ்ந்து வரும் ஜெயலலிதா, நாளை இந்தியாவின் வரைபடமாக மாற இருக்கின்றார். (தமிழகத்தின் வரைபடத்தில் ஒரே இருளாக உள்ளதே அண்ணே)
இந்தியா வல்லரசு நாடாக மலர வேண்டும் என்றால் இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதா வரவேண்டும். ஒட்டு மொத்த இந்திய மக்களும், ஜெயலலிதா பிரதமராக வருவதை தான் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றார்கள்” என்று பேசி முடித்தார்.
வைகை அண்ணே… இந்தியாவை வல்லரசாக்க வல்ல ஒரே நம்பிக்கை நட்சத்திரம், புரட்சித் தலைவியை ஜாக்கிரதையாக பாத்துக்குங்க… வல்லரசு கனவில் உள்ள சீனா ஏதாவது சில்மிஷம் செஞ்சிடப் போகுது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக