புதன், 27 பிப்ரவரி, 2013

முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா மத பயங்கரவாதமாகும் -மொஹமட் முஸ்ஸாமில்-

முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா மத பயங்கரவாதமாகும் -மொஹமட் முஸ்ஸாமில்-
முஸ்லிம் பெண்கள் முழு உடலும் மறைக்கும் வகையில் அணியூம் பர்தா ஆடை மத பயங்கரவாதத்தை வெளிப்படுத்துவதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல்சபை உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் கூட இந்த ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்வை எனவூம் அவர் சுட்டிக் காட்டியூள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவோ, பங்களாதேஷ் பிரதமரே, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரப்பானியோ இப்படியான ஆடைகளை அணிவதில்லை எனவூம் அவர் கூறியூள்ளார். சில மத அடிப்படைவாதிகளின் தேவைக்காகவே இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிந்து வருவதாகவூம் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியூள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக