புதன், 27 பிப்ரவரி, 2013

பங்காரு அடிகளார் மனைவி, மகன்களுக்கு முன் ஜாமீன்! லஞ்சம் கொடுத்தபோது சிக்கிய கேஸ்!!

சாமிக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. ஆசாமிக்கு கொடுக்கலாம்... ஆசாமியும் கொடுக்கலாம்!
 சாமிக்கு லஞ்சம் கொடுக்க முடியாது. ஆசாமிக்கு கொடுக்கலாம்… ஆசாமியும் கொடுக்கலாம்! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் மேல்படிப்பு தொடங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய நிறுவனர் பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார்.
இவர்கள் லஞ்சம் கொடுக்க முயன்றபோது, பொறி வைத்து பிடித்தது சி.பி.ஐ. விபரங்களை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.
சி.பி.ஐ., இந்த லஞ்ச விவகாரத்தில் லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன்கள் செந்தில், அன்பழகன் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சம்மன் அனுப்பியது. கைதாவதை தடுக்க லட்சுமி உள்ளிட்ட மூன்று பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர். சுப்பையா, மனுதாரர்கள் 3 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், மனுதாரர்கள் 3 பேரும் சம்பந்தப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் மார்ச் 15-ம் தேதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். viruviruppu,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக