புதன், 27 பிப்ரவரி, 2013

சினேகா: நான் நடித்த படத்தைப் பார்த்து நானே அழுதது

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் கிஷோர், சினேகா, குழந்தை நட்சத்திரம் பிருத்விராஜ் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஹரிதாஸ். திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் அரங்குநிறைந்த காட்சிகளாக, தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ஹரிதாஸ் படத்தில் சினேகா நடிப்பும் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.ஹரிதாஸ் திரைப்படத்தைப் பார்த்தவர்கள்  அனைவரும், சினேகா அமுதவல்லி டீச்சராகவே வாழ்ந்திருக்கிறார் என்று பாராட்டுகின்றனர். இத்தகைய    பாராட்டுக்குறிய   சினேகா சமீபத்தில் அளித்த பேட்டியில் “ யதார்த்தமான கதைகளில் நடிப்பது சாதாரணமானது அல்ல. முதல்முறையாக நான் மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறேன். அமுதவல்லி டீச்சர்  கதாபாத்திரமாகவே மாறி நடித்தது மறுக்கமுடியாத உண்மை. இதுவரை மற்றவர்கள் படங்களைப் பார்த்து;அழுதிருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தைப் பார்த்து நானே அழுதது இது தான் முதல் முறை.ஹரிதாஸ் சிறந்த படம். நான் கலங்கிய கண்களுடன் தியேட்டரை விட்டு வெளியேறியது கிஷோர், பிருத்துவி நடிப்பப் பார்த்துதான்” என்று கூறினார். மேலும் பேசிய போது “ நானும் பிரசன்னாவும் தினமும் தலைப்புச் செய்திகளில் வந்துகொண்டிருந்த்தால் தான், பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாமல் பேட்டிகளை தவிர்த்துவந்தோம்” என்று கூறினார்.cinema.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக