சனி, 2 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் பிரச்னை முடிவுக்கு வந்தது!

பிரேம் எடிட்டிங், சவுன்ட் ட்ராக் மியூட்டிங் உண்டு!!

Viruvirupu
விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவடைந்தது. “வெற்றிகரமான முடிவு எட்டப்பட்டது. படம் ரிலீஸ் தேதியை மிக விரைவில் அறிவிக்கிறேன்” என தெரிவித்தார் கமல்.
இஸ்லாமிய அமைப்புகள் கூறிய 7 காட்சிகளை எடிட் செய்ய கமல் சம்மதித்ததாக தெரிகிறது. சில இடங்களில் சவுன்ட் ட்ராக்கை நீக்குவது பற்றியும் கமல் குறிப்பிட்டார். இதன் அர்த்தம், 7 காட்சிகள் முழுமையாக வெட்டப்படும் என்பதல்ல. அவற்றில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பகுதிகள் எடிட் செய்யப்படும் என்பதே.
எவ்வளவு பிரேம்கள் வெட்டப்படும், எவ்வளவு சவுன்ட் ட்ராக் மியூட் செய்யப்படும் என்பதை, ஒரிஜினல் படம் பார்த்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
புதிதாக எடிட் செய்யப்பட்ட படம், தணிக்கை குழுவிடம் மீள்-சமர்ப்பிப்பு செய்யப்படும் எனவும் கமல் கூறியுள்ளார். அது ஒரு நடைமுறைதான். அதில் சிக்கல் ஏதும் இருக்கப் போவதில்லை.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 24 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளனர்.
மாலை 3 மணிக்குத் தொடங்கிய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததாக, நிருபர்களிடம் கமல் தெரிவித்தார். படத்தில் ரிலீஸ் தொடர்பாக சிலருடன் பேசவேண்டி இருப்பதாகவும், அதையடுத்து ரிலீஸ் தேதியை மிக விரைவில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில்கூட இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக