சனி, 2 பிப்ரவரி, 2013

தி.மு.க. தலைவர்: ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா ?

தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கை.விஸ்வரூபம் திரைப்படம் குறித்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் நிறுவனத்திற்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் . ராமன் வீட்டிற்கு மின் வாரியத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் சென்று மிரட்டியதாக ஏடுகளில் எல்லாம் செய்தி வந்திருக்கிறதே? நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். வழக்கறிஞர் .ராமன், பேரறிஞர் அண்ணாவின்  நண்பரும், மூத்த வழக்கறிஞருமான வி.பி.ராமனின் மகனாவார். கழக ஆட்சியில் அவர் அட்வகேட் ஜெனரலாகத் திறம்படப் பணியாற்றினார். எந்த வழக்கிலும் நேர்மையாக வாதிடக் கூடியவர். வழக்கறிஞர் என்ற முறையில்தான் ராஜ்கமல் நிறுவனத் திற்காக வாதாடியிருக்கிறார். ஆனால் அவருடைய வீட்டிற்கு 30-1-2013 அன்று மின் திருட்டு தடுப்புப் பிரிவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் திடீரென்று சென்று, வீட்டு உபயோகத்திற்கான மின் சாரத்தை, வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்து, மின் இணைப்பைத் துண்டிக்க முயற்சித் திருக்கிறார்கள்.வீட்டிலே இருந்தவர்களை மிரட்ட முயற்சித்த நேரத்தில், ராமனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு  திரும்பச் சென்று விட்டார்களாம். ஆனால் இப்படிப்பட்ட செயல்களால் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக