புதன், 27 பிப்ரவரி, 2013

Jayalalitha dismiss கோகுல இந்திரா, என்.ஆர்.சிவபதி, டாக்டர் விஜய்

மூன்று பேரின் அமைச்சர் பதவிகளோடு,
கட்சி பதவிகளும் பறிப்பு! ஜெ. நடவடிக்கை!

தமிழக அமைச்சரவையில் கோகுல இந்திரா, என்.ஆர்.சிவபதி, டாக்டர் விஜய் ஆகியோரின் அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் கட்சி பதவிகளையும் ஜெயலலிதா பறித்துள்ளார்.
கோகுல இந்திரா அதிமுக மகளிர் அணி செயலாளராக இருந்தார். திருச்சி புறநகர் மாவட்ட பொறுப்பு வகித்தவர் என்.ஆர்.சிவபதி. வேலூர் மாவட்ட செயலாளராக இருந்தவர் டாக்டர் விஜய்.
கோகுல இந்திரா சுற்றுலாத் துறையை கவனித்து வந்தார். இவர் சென்னை அண்ணா நகரில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். பள்ளிக்கல்வி, சட்டம் உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தவர் என்.ஆர்.சிவபதி. இவர் திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் தேர்வு செய்யப்பட்டவர். வேலூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர் விஜய். இவர் சுகாதாரத்துறையை கவனித்து வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக