சனி, 2 பிப்ரவரி, 2013

பொட்டு சுரேஷ் கொலை அட்டாக் பாண்டி ஆதரவாளர்கள் 9 பேர் சரண்

திண்டுக்கல் : அழகிரியின் விசுவாசியாக இருந்து வந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 9 பேர் இன்று கோர்ட்டில் சரண் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை மதுரையில், தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மத்திய அமைச்சர் அழகிரியின் தீவிர விசுவாசியுமான பொட்டு சுரேஷ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார்.
இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோர்ட்டில் 7 பேர் சரண் அடைந்தனர். பெயர் விவரம் வருமாறு: சபாரத்தினம், ராஜூ, சந்தானம், கார்த்திக், சேகர், லிங்கம், செந்தில் ஆகியோர் ஆவர். இது போல மேலூர் கோர்ட்டில் 2 பேரும் சரண் அடைந்ததாக கோர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது.


அட்டாக் பாண்டி ஆதவரவாளர்கள்:

இன்று கோர்ட்டில் ஆஜரானவர்கள் பிரபல ரவுடி அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் என தெரிய வந்துள்ளது. கீரைத்துறையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு ஆதரவாளராக இருந்து வந்த இவர் மீது சமீபத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவில் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நத்தம் கோர்ட்டில் 7 பேரும் மேலூர் கோர்ட்டில் 2 பேரும் சரண் அடைந்துள்ளனர். மத்திய அமைச்சர் அழகிரிக்கு இவர் நெருக்கமாக இருந்ததால் அட்டாக் பாண்டி போன்றவர்கள் அழகிரியை நெருங்குவதில் சிரமம் இருந்ததாம். இதனால் அதிருப்தியுற்ற அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

9 பேரிடம் விசாரணை:

கோர்ட்டில் ஆஜரான 9 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தவகல்கள் கிடைக்கும் என போலீசார் கூறுகின்றனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக