சனி, 22 டிசம்பர், 2012

Kerala மதரசா 6ம் வகுப்பு மாணவி பலாத்காரம் ஆசிரியருக்கு 22 ஆண்டு சிறை

கேரளாவில், மதரசா பள்ளியில் பயின்ற, ஆறாம் வகுப்பு மாணவியை, பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆசிரியருக்கு, 22 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மூணாம் கடவில், இஸ்லாமிய மார்க்கத்தில் கல்வி போதிக்கும் மதரசா பள்ளி உள்ளது. 2008ல், இந்தப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த, 10 வயது மாணவியை, ஆசிரியர் அயூப், 31, பலாத்காரம் செய்தார். அத்துடன், "நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால், ஆற்றில் தள்ளி கொன்று விடுவேன்' என்றும் மாணவியை மிரட்டினார். இதையடுத்து, ஆசிரியர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் போன்ற பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த, காசர்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிபதி, பாஸ்கரன், நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.ஆசிரியர் அயூப்பிற்கு, மாணவியை பலாத்காரம் செய்தது மற்றும் அச்சுறுத்தியதற்காக, தலா, 10 ஆண்டுகள் என, 20 ஆண்டுகளும், ஆதாரங்களை அழித்ததற்காக, இரண்டு ஆண்டுகள் என, மொத்தம், 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அத்துடன், 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை கட்டத்தவறினால்,மேலும் மூன்று மாதங்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக