சனி, 22 டிசம்பர், 2012

பா.ஜ., ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.846 கோடி இழப்பு: சி.பி.ஐ

புதுடில்லி :தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்த போது, வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும், விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில், வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் 6.2 மெகாஹெர்ட்சுக்கு அதிகமான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடு நடந்து இருப்பதாக தெரிய வந்தது.இவ்வழக்கின் விசாரணை, நேற்று சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்தது. அப்போது, நீதிபதி, ஓ.பி.ஷைனி முன், சி.பி.ஐ., குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதில், அரசுக்கு, 846 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மகாஜன் கொலைப் பின்னணியை ஆராய்ந்தால்..
இந்த கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை, பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஹட்சிசன் மேக்ஸ் - ஸ்டெர்லிங் செல்லுலர் ஆகிய மூன்று நிறுவனங்கள் முறைகேடுகள் செய்து பெற்றுள்ளன.இந்த மூன்று நிறுவனங்களுக்கு, அப்போது, தொலைதொடர்பு அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், கூடுதல் ஸ்பெக்ட்ரம்களை ஒதுக்கீடு செய்துள்ளார். தொலைதொடர்பு கொள்கையை மீறி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அவசரம் காட்டப்பட்டுள்ளது.கூடுதல் ஒதுக்கீடு பெறுவதற்காக, மூன்று நிறுவனங்களும், தங்களின் ஒட்டு மொத்த வருவாயை குறைத்து காட்டியும், சந்தாதாரர்கள் எண்ணிக்கையை கூட்டி காட்டியும் சில முறைகேடுகளை செய்துள்ளன. தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலர் ஷியாமல் கோஷ், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்துள்ளார்.இவ்வாறு, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், பி.எஸ்.என்.எல்., முன்னாள் இயக்குனர், ஜே.ஆர்.குப்தா பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், சி.பி.ஐ.,யின் நேற்றைய குற்றப் பத்திரிகையில் அவர் பெயர் இடம் பெறவில்லை. அவர் சாட்சியாக மாறியதால், குறிப்பிடப்படவில்லை என, தெரிகிறது.இந்த வழக்கு தொடர்பாக, மறைந்த முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் பிரமோத் மகாஜன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சி.பி.ஐ., குறிப்பிட்டுள்ளது. மகாஜன், 2001ம் ஆண்டு முதல், 2003ம் ஆண்டு வரை, தொலை தொடர்பு அமைச்சராக இருந்தார்.dinamalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக