சனி, 22 டிசம்பர், 2012

2 MP, 6 MLA மீது பெண்களை கொடுமைபடுத்தியது, கற்பழித்த வழக்குகள்

புதுடில்லி :"பெண்களை கொடுமைபடுத்தியது, கற்பழித்தது உள்ளிட்ட வழக்குகளை எதிர்நோக்கியுள்ள சிலருக்கு, முக்கிய அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கொடுத்துள்ளன. தற்போது பதவி வகிக்கும், இரண்டு எம்.பி.,க்கள், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மீது,கற்பழிப்பு வழக்குகள் உள்ளன'என,தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம் என்ற அமைப்பு, கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சமீபத்தில், பல்வேறு மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் குறித்த தகவல்களை திரட்டியது.இதில், போட்டியிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த, வேட்பு மனுவில், அவர்களின் சொத்துவிவரம், வழக்குகள் உள்ளிட்டவிவரங்களும் இடம் பெற்றுள்ளன.
இதில், திரிணமுல் காங்கிரஸ்கட்சியை சேர்ந்த, தம்லுக் தொகுதி எம்.பி., சுவேந்து அதிகாரி உள்ளிட்ட இரண்டு எம்.பி.,க்கள் மீது, பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் பெண்மையை அவமதித்த குற்றங்களின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது தொடர்பானவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.
கேக்க ரொம்ப நல்லா இருக்கு முதல்ல இதை கவனிங்கப்பா வல்லரசாவத்தை பத்தி அப்புறம் யோசிக்கலாம் 
இதுதவிர, உ.பி., மாநில, சமாஜ்வாதியைச் சேர்ந்த, நான்கு பேர் மீதும்; குஜராத் மாநில, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஒருவர் மீதும்; ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, ஒருவர் மீதும், கற்பழிப்பு வழக்குகள் உள்ளன.மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக, பல்வேறு மாநிலங்களில் உள்ள, கட்சிகளை சேர்ந்த, 36 எம்.எல்.ஏ.,க்கள் மீதும், வழக்குகள் உள்ளன.இவ்வாறு, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு திரட்டிய,தகவலில் கூறப்பட்டுள்ளதாக, ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக