சென்னை: கல்யாணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்றார்
இலியானா. கேடி தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு தெலுங்கு
சினிமாவுக்கு சென்றுவிட்டார். தமிழில் பட வாய்ப¢புகள் வந்தபோது ஏற்க
மறுத்தார். இந்நிலையில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் அதிக சம்பளம்
பேசப்பட்டதால் அதில் மட்டும் நடித்தார். இப்போது பாலிவுட்டில் நடித்து
வருகிறார். ஹாலிவுட் கலாசாரம் மெதுவாக பாலிவுட், கோலிவுட்டுக்கு பரவி
உள்ளது. நட்பாக பழகும் ஹீரோ, ஹீரோயின்கள் ஒன்றாக சேர்ந்து
வாழ்வதும் பின்னர் பிரேக் அப் என்று சொல்லிவிட்டு பிரிந்துவிடுவதும்
திரையுலகில் சாதாரணமாகிவிட்டது. இந்த பாணியில் பிரபுதேவா, நயன்தாரா ஜோடி
சேர்ந்து வாழ்ந்து பின்னர் பிரேக் அப் ஆயினர். அதேபோல் சித்தார்த்ஸ்ருதி
ஜோடியும் இந்த பாணியை பின்பற்றினார்கள். பாலிவுட்டில் சைப் அலிகான்கரீனா
கபூர் ஜோடி 5 ஆண்டுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்தனர். சமீபத்தில்தான்
இவர்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்டனர். மதராசபட்டினம் எமி ஜாக்சன்,
இந்தி நடிகர் பிரதீக்குடன் இதேபோல் வாழ்ந்து பின் பிரிந்தார்.
இந்த பாணியிலான வாழ்க்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் இலியானா. இந்தி படங்களில் நடித்து வரும் இலியானாவுக்கும் ஷாஹித் கபூருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். இது பற்றி இலியானாவிடம் கேட்டபோது, ‘மனதுக்கு பிடித்தவருடன் நட்பு பாராட்டுவது, டேட்டிங் செல்வது தப்பில்லை. நான் நவீன காலத்து பெண். என்னைப்பற்றி யார் என்ன கூறினாலும் அதுபற்றி கவலை இல்லை. சொல்பவர்கள் ஏதாவது ஒரு குறையை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது என்று தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சால் பார்வை இழந்த காரைக்கால்
பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக,
காரைக்கால் தெற்குத்தொகுதி எம்.எல்.ஏ நாஜிம் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் எம்.எம்.ஜி நகரைச் சேர்ந்தவர்
இன்ஜினியர் பெண் வினோதினி. சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி, தீபாவளி
விடுமுறைக்காக காரைக்கால் வந்தபோது, வினோதியின் ஒருதலை காதலன் சுரேஷ்
என்பவரால் ஆசிட் வீசப்பட்டு படுகாயத்துடன் சென்னை அரசு மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பலனின்றி அண்மையில் வினோதியின்
இரு கண்களின் பார்வையும் பறிபோனது. தொடர் சிகிசைக்கு பணம் இன்றி
கஷ்டப்படும் பெண்ணின் தந்தை நிதி உதவி செய்யுமாறு பொதுமக்களுக்கு
வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு சிலர் இந்த வேண்டுகோளை தவறாக பயன்படுத்த
பேஸ்புக் போன்றவற்றில் தவறான வங்கி எண் வழங்கி நிதி திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காரைக்கால் தெற்குத்தொகுதி
எம்.எல்.ஏ நாஜிம் கூறியதாவது: ஆசிட் வீச்சால் பார்வை இரண்டும்
பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட இளம் பெண்ணின் சிகிச்சை செலவுக்காக,
மாவட்ட திமுக சார்பில், ரூ.25 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அப்பெண்ணுக்கு நிதி
உதவி வழங்க வலியுறுத்தியுள்ளேன். புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தை
விதிமுறைகள் அமலில் இருந்தாலும், பெண்ணின் இக்கட்டான நிலையை உணர்ந்து,
தேர்தல் துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று அப்பெண்ணுக்கு நிதி உதவி வழங்க
முதல்வர் முன்வரவேண்டும். குறைந்தபட்சம் நிதி உதவி வழங்குவதாக மருத்துவமனை
நிர்வாகத்திற்கு உறுதியாவது அளிக்கவேண்டும். மேலும், பொதுமக்கள்
அப்பெண்ணுக்கு நிதி உதவி வழங்க முன்வந்தால் மாவட்ட திமுக அதை வரவேற்கிறது
என்றார்.
நிதி உதவி செய்வோருக்காக வினோதியின் தந்தை பெயர் ஜெயபாலன், செல் எண்:8508680366, இந்தியன் வங்கி கீழ்பாக்கம் கிளை, அக்கொவுண்ட் எண்: 603899558, ஐ.எப்.சி கோடு IDIB00019037

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக