திங்கள், 10 டிசம்பர், 2012

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு முன் ஜாமீன்!

Viruvirupu
கிரானைட் முறைகேடு வழக்கில், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி உட்பட 10 பேருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.
கிரானைட் முறைகேட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தலைமறைவாக இருந்து வந்தார்.
அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுக்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையிலும், மீண்டும் மீண்டும் முன் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.
துரை தயாநிதி உட்பட 10 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, துரைதயாநிதி உட்பட 10 பேருக்கும் முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த 10 பேரும், அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலையத்தில் தினமும் வந்து கையெழுத்து இட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக