ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை தாழ்வு மனப்பான்மையே காரணம் !

 நித்யஸ்ரீயின் கணவர் என்று சொல்வது அவருக்கு பிடிக்காது. மகாதேவனின் மனைவி நித்யஸ்ரீ என்று சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும். நித்யஸ்ரீயை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது மகாதேவனுக்கு பிடிக்காது என்று நித்யஸ்ரீயின் குடும்ப நண்பர்கள் கூறியதாகவும் இதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையே அவரது தற்கொலைக்கு காரணமெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
13 வருடங்களுக்கு முன்பு அவர்கள் திருமணம் நடந்தது. மகாதேவனும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், நிறைய தாழ்வு மனப்பான்மை கொண்டவர். ஊர் உலகம் மகாதேவனை, நித்யஸ்ரீயின் கணவர் என்று சொல்வது அவருக்கு பிடிக்காது. மகாதேவனின் மனைவி நித்யஸ்ரீ என்று சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும்.
நித்யஸ்ரீயை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது மகாதேவனுக்கு பிடிக்காது. தனக்கு தெரியாமல் நித்யஸ்ரீ எதையும் செய்யக்கூடாது என்று மகாதேவன் நினைத்தார். நித்யஸ்ரீயின் இன்னிசை கச்சேரிகளைக்கூட மகாதேவன்தான் முடிவு செய்வார். மகாதேவன் சொல்லும் கச்சேரியில்தான் நித்யஸ்ரீ கலந்து கொள்ள வேண்டும். தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் நித்யஸ்ரீ கணவரிடமே கொடுத்துவிடுவார். மிகவும் தங்கமான அந்த பெண்ணுக்கு இப்படியரு சோகமும், சோகம் தாக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை. தனது தாயார் இறந்தபிறகு, மகாதேவன் மன உளைச்சலோடு காணப்பட்டார் என்பதும் உண்மை. இதுபோன்ற ஒரு இறுக்கமான சூழலை தாங்கிக்கொண்டு நித்யஸ்ரீ வாழ்ந்து வந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்   சலசலப்பு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக