வியாழன், 20 டிசம்பர், 2012

திராவிட இயக்கத்தை வீழ்த்தும் முயற்சி நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் திராவிட இயக்கத்தை வீழ்த்தும் முயற்சி நடக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். வடசென்னை- தென்சென்னை மாவட்ட திமுக சார்பில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 91-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தங்கசாலையில் நேற்று மாலை நடந்தது. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் எம்.பி., ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கிரிராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திமுக பொது செயலாளர் அன்பழகன் ஏற்புரையாற்றினார். அன்பழகனுக்கு திமுக தலைவர் கருணாநிதி நினைவு பரிசு வழங்கி பேசியதாவது:ன்வெட்டை கண்டித்து திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. 500 இடங்களில் போராட்டம் நடந்தது. சென்னையில் உள்ள சில பத்திரிகைகள் தவிர, வேறு யாரும் வெளியிட்டார்களா என்பதை எண்ணி பாருங்கள். தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள். அனைத்து செய்திகளையும் வெளியிடுங்கள். பத்திரிகை இல்லாவிட்டால், எங்களுக்கு சுவர்கள் இல்லையா? கரித்துண்டு இல்லையா? அவற்றில் எழுதி கருத்துக்களை பரப்புவோம். பத்திரிகைகள்தான் மூல பலம் என்று கருதவில்லை. எங்களுக்கு மூளை பலம் இருக்கிறது. திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. . நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம். கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை ஒழித்தே தீருவேன் என்பது ஜனநாயகம் அல்ல. சர்வாதிகா ரம். சட்டமன்ற கட்டிடத்தை மாற்றலாம். மக்களை மாற்ற முடியாது. மக்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள். அதற்கு தயாராக இருக்கிறார்கள். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இந்த இருண்ட ஆட்சியை அகற்ற மக்களோடு நாங்கள் இணைந்து பாடுபடுவோம். திராவிட இயக்கத்தை வீழ்த்தும் முயற்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. நாங்கள் தான் உண்மையான திராவிட இயக்கம் என்று ஊரை ஏமாற்றியவர்கள் இதில் பிரதானமாக செயல்படுகிறார்கள். யார் எதிர்த்தாலும், எத்தனை சேனை வந்தாலும் நான் நம்பி இருப்பது உங்களைத்தான். இந்த முறை நாம் கோட்டை விட்டால். கோட்டையை விட்டவர்களாவோம் என்பதை மறந்து விடக்கூடாது. திராவிட இன உணர்வை அழிக்கும் முயற்சிக்கு நாம் இடம் தரக்கூடாது. இவ்வாறு கருணாநிதி பேசினார். விழாவில், காவிரியில் தண்ணீர் இல்லாததால் தற்கொலை செய்த 7 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியை கருணாநிதி வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக