சென்னை: மெரினா கடற்கரையில் வட மாநிலத்தவர் ஒருவர் மர்ம நபர்களால்
அடித்து கொலை செய்யப்பட்டார். இன்று காலை வாக்கிங் சென்றவர்கள், உடலை
பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரினாவில்
கொலை நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளியை
போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் தினமும் காலை, மாலை
நேரங்களில் கூட்டம் அலைமோதும். காலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்களும்,
உடற்பயிற்சி செய்பவர்களும் திரண்டிருப்பார்கள். அவர்களை கட்டுப்படுத்த
ஆங்காங்கே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். குதிரைப்படை
போலீசாரும் ரோந்து சுற்றி வருவார்கள்.
இன்று காலை ஏராளமானோர் மெரினாவுக்கு வந்திருந்தனர். வழக்கம்போல சிலர் நடை பயிற்சியும் சிலர் உடற்பயிற்சியும் மேற்கொண்டனர். துப்பணித்துறைக்கு சொந்தமான குடிநீர் வடிகால் வாரியம் எதிரே 400 மீட்டர் தூரத்தில் கடற்கரை மணல் பரப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அந்த வழியாக வாக்கிங் சென்றவர்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் பரவியதும் அந்த இடத்தில் கூட்டம் திரண்டது. உடனடியாக இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் திருவள்ளுவர் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
கடற்கரையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. நீண்ட தலை முடியும், தாடியும் வைத்திருந்தார். அவரை முன்விரோதத்தில் யாரேனும் அடித்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடற்கரையில் கொலை நடந்ததா அல்லது வேறு எங்காவது கொலை செய்து, உடலை மெரினாவில் வீசிவிட்டு சென்றார்களா என பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். எப்போதும் ஆள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் மெரினா கடற்கரையில் வடமாநிலத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.http://www.tamilmurasu.org/index.asp

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக