வெள்ளி, 14 டிசம்பர், 2012

நாஞ்சில் சம்பத்துக்கு ஜெயலலிதா innova கார் பரிசு 250 மதிமுகவினரை அதிமுகவுக்கு

மதிமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்து கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ள நாஞ்சில் சம்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அவரை அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆக்கினார். இந்நிலையில் சம்பத் மதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்கள் 250 பேரை அதிமுகவில் சேர்க்க இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக்கத்திற்கு அழைத்து வந்தார். இன்று பகல் 12.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் அந்த 250 பேரும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது முதல்வர் நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். சம்பத் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உதவியாக இந்த கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.
தனக்கு காரை பரிசளித்த முதல்வருக்கு சம்பத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் அதிமுகவில் இணைந்தவர்களை வாழ்த்திவிட்டு அவர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, அன்புச் சகோதரர் நாஞ்சில் சம்பத் தலைமையில் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். நீங்கள் நல்ல இடத்திற்கு வந்துள்ளீர்கள். எந்த நம்பிக்கையில் கழகத்தில் இணைய வந்திருக்கிறீர்களோ அந்த நம்பிக்கை வீண் போகாது. கல்லாமை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம். தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நாம் போராடி அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும். இந்த லட்சியத்தை அடைய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களுக்கு மிகவும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என்றார். மதிமுகவில் இருந்து இன்று அதிமுகவில் இணைந்த நிர்வாகிகளில் சிலரின் விவரம் வருமாறு, மதிமுக பொறியாளர் அணி துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட அவைத் தலைவருமான லட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி வசந்தம் சரவணன், சட்டத்துறை துணைச் செயலாளர் மதுரை ஆசைத் தம்பி. சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், மாநில சட்டத்துறை துணை செயலாளரும், வடுகபட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சி.ஜெ.பிலிப்சன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொன்னியின் செல்வன். சிவகங்கை மாவட்ட, சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் புதுவயல் சுப்பிரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்கால் சக்திவேல் உடையார், தென்சென்னை மாவட்ட அவை தலைவர் ஹைடெக் மனோகரன், மாவட்ட பொருளாளர் ஈகை செல்லப்பாண்டியன்.
http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக