வியாழன், 27 டிசம்பர், 2012

கோவை, திருப்பூரில் ஆள் தூக்கி'கள் அதிகரிப்பு: போலீசுக்கு அதிர்ச்சி

நிதிமோசடி குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், மர்ம நபர்களால் கடத்தப்படும் சம்பவங்கள் கோவை, திருப்பூரில் அதிகரித்து வருகின்றன. "மோசடி வழக்குகளில், போலீஸ் நடவடிக்கை மீதான நம்பிக்கை, முதலீட்டாளர்களிடம் குறைந்து வருவதே, இதுபோன்ற கடத்தல்களுக்கு முக்கிய காரணம்' என, கூறப்படுகிறது.< கோவை, திருப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில், நிதி மோசடி குற்றங்கள் அதிகரித்துள்ளன. நடப்பாண்டில், புற்றீசல்போல முளைத்த எண்ணற்ற ஈமு கோழி நிறுவனங்கள், பொதுமக்களிடம் பல கோடி ரூபாயை சுருட்டின. அடுத்ததாக, நாட்டுக்கோழி, வான் கோழி, ரியல் எஸ்டேட் என்ற பெயரில், மேலும்பல மோசடி நிறுவனங்கள் தோன்றி, தங்கள் பங்குக்கு பணத்தை அபகரித்தன.இம்மோசடிகளை எல்லாம் விழுங்கும் வகையில், "பைன் பியூச்சர்' "பைன் இந்தியா' என்ற பெயரில், கோவையில் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 8,000 ரூபாய் வரை வருமானம் அளித்து, இரண்டாண்டு முடிவில், முதலீட்டுத்தொகையை திரும்ப வழங்குவதாகவும் அறிவித்தன. இதையடுத்து, பல ஆயிரம் முதலீட்டாளர்கள் தலா 5 லட்சம், 10 லட்சம் என, பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்தனர்; இரு மாதங்களில் அந்நிறுவனம் மூடுவிழா கண்டது; முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் புகார் அளித்தனர். எனினும், மோசடி நபர்கள் மீதான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டாததால், தங்களது முதலீட்டுத் தொகை திரும்பக்கிடைக்குமா? என, விரக்தியடைந்துள்ளனர். 
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

எல்லாம் நடப்பாண்டில் நடக்கும் பயங்கரம்.. குற்றங்களை குறைப்பேன் என்று குதித்துக் குதித்து வந்த கோமளவல்லி.. இதற்கும் மத்திய அரசையும், பழைய அரசையும் தான் குற்றம் சொல்லுவாரா ?
ஒரு சில முதலீட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ரவுடிகளின் உதவியையும் நாடியதாக கூறப்படுகிறது.இதன்காரணமாக, நிதிமோசடி குற்றவாளிகள் கடத்தப்படும் சம்பவங்கள், அடுத்தடுத்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில், கோவையில் "பைன் பியூச்சர்' மோசடி நிறுவன நிர்வாகி விவேக் என்பவரை கடத்த முயன்ற கும்பலை, பீளமேட்டில் போலீசார் கைது செய்தனர்; ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மு அதிபர் கொலை :திருப்பூர், பொல்லிகாளிபாளையம், பொன்கோவில்நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட "ஜோதிவேல் ஈமு கோழி நிறுவனம்' கரூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நபர்களிடம் 300 கோடி ரூபாயை சுருட்டியது. நிறுவன இயக்குனர்கள் மோகன், அமுல் ஆகியோர் தலைமறைவாகினர். அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி காரில் கடத்தப்பட்ட மோகன், கர்நாடகாவில் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மூன்றாவது கடத்தல்:சோமனூர் அடுத்த தேவராயம்பாளையம், சிங்கப்பூர் நகரைச் சேர்ந்த மோகன் என்பவர், "பைன் பியூச்சர்' நிறுவன ஏஜன்டாக செயல்பட்டு, மக்களிடம் பல லட்சம் ரூபாயை வசூலித்து, நிறுவனத்தில் செலுத்தினார். அந்த நிறுவனம் மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், கடந்த 24ம் தேதி மோகனை கடத்தியது. போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கும்பல், மோகனை விடுவித்து தப்பியது. அடுத்தடுத்து நடக்கும் கடத்தல் சம்பவங்கள், போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.

இவற்றின் பின்னணி குறித்து, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்க, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதி மோசடி குற்றங்களில் தொடர்புடைய நபர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், போலீஸ்துறை மீது, மக்கள் நம்பிக்கை இழந்துவருவதையே காட்டுகிறது. முதலீட்டாளர்களிடம் புகார் பெற்றதும், போலீசார் துரிதமாக செயல்பட்டு, மோசடி நபர்களின் சொத்து மற்றும் வங்கி பண பரிமாற்றங்களை முடக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். இந்நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுமானால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக முதலீட்டாளர்கள் கருத வாய்ப்புள்ளது. தற்போது, அதிகரித்துள்ள நிதி மோசடி குற்றங்களை விசாரிக்க, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லை; அடிப்படை வசதிகளும் கிடையாது. வழக்குகள் அதிகளவில் தேங்க இதுவும் முக்கிய காரணம். பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளை விரைவுபடுத்தினால் மட்டுமே, கடத்தல் மற்றும் கொலையை தடுக்க முடியும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

- நமது நிருபர் dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக