வியாழன், 27 டிசம்பர், 2012

Delhi Rape Victim சிங்கப்பூர் அனுப்பப்பட்டார்! நேற்று நள்ளிரவு ரகசிய ஏற்பாட்டில்

டில்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவ ம‌ாணவி, வெளியே தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், நள்ளிரவில் ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அவர் சிங்கப்பூர் அனுப்பப்படும் விஷயம், ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இரவு 10.30 மணியளவில், டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில்...இந்த மாணவி தொடர்பான போராட்டங்கள் டில்லியில் நடைபெறுவதால், மாணவியை சிங்கப்பூர் அனுப்பி வைக்க மேற்கொள்ளப்பட்ட முடிவு, மீடியாக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது. ஆனால், ஏற்பாடுகள் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவே தொடங்கியிருந்தன என தற்போது தெரியவருகின்றது.
இரவு 10.30 மணியளவில், டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில்…
சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட வெளியுறவு அமைச்சு, மாணவிக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.
அதையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்துக்கும், வெளியுறவு அமைச்சுக்கும் இடையே, மாணவிக்கு கொடுக்கப்பட வேண்டிய சிகிச்சை, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) காலை ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.
இந்த ஏற்பாடுகள் சிங்கப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்க நேற்று காலை டில்லி சப்தர்ஜங் வைத்தியசாலைக்கு பிரபல cardiovascular சர்ஜன் டாக்டர் நரேஷ் ட்ரிஹான் அழைக்கப்பட்டார்.
மாணவியை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் அனுப்புவதற்கு, மாணவியில் உடல் நிலை இடம்கொடுக்குமா என பரிசோதனை செய்து ரிப்போர்ட் கொடுத்தார் அவர்.
மாணவியை அழைத்துச் செல்லலாம் என அவர் ரிப்போர்ட் கொடுத்த ஓரிரு மணி நேரத்தில் டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சு, மாணவி, பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தோருக்கான பாஸ்போட், விசா ஏற்பாடுகளை செய்தது. 
 அடுத்த ஏற்பாடாக, தனியாருக்கு சொந்தமான Club One ஏர் ஆம்புலன்ஸ், மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. புதன் கிழமை மதியமே, எந்த நிமிடத்திலும் புறப்பட தயாராக இருக்க வேண்டும் என உத்தரவு கொடுக்கப்பட்டதில், Club One ஏர் ஆம்புலன்ஸ், டில்லி ஏர்போர்ட்டில் நேற்று மாலையே கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தது.
VT ARE என்ற கால் சைன் உடைய இந்த ஏர் ஆம்புலன்ஸ் எதற்காக விமான நிலையம் வந்து காத்திருக்கிறது என்ற விபரம், விமான நிலைய அதிகாரிகளுக்கே தெரியாது.
நேற்று இரவு 10.30 மணியளவில் மாணவி, டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். Club One ஏர் ஆம்புலன்ஸ், டில்லி விமான நிலையத்தில் இருந்து 11.10க்கு டேக்-ஆஃப் செய்தது.
டில்லி ஏர்போர்ட் தகவல்களின்படி, Club One ஏர் ஆம்புலன்ஸில், மாணவி தவிர 9 பயணிகள் பயணம் செய்தனர். மாணவியின் பெற்றோர், டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் Critical Care Unit தலைவர் டாக்டர் யாதின் குப்தா, மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் குழுவை சேர்ந்தவர்களே அந்த 9 பேர்.
மாணவியின் உடன்பிறந்தவர்கள், ஏர் ஆம்புலன்ஸில் புறப்பட்டு சென்ற 1 மணி நேரத்தில் டில்லியில் இருந்து சிங்கப்பூர் சென்ற சாதாரண பயணிகள் விமானத்தில் பயணம் செய்தனர்.
Club One ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒரு மல்டி டர்போ இஞ்சின் விமானம் ஆகையால், 6 மணி நேர பயணத்தில், சிங்கப்பூரை சென்றடைந்துவிடும். Viruvirupu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக