திங்கள், 10 டிசம்பர், 2012

அழகிரியின் சஸ்பென்ஸ்! வெயிட் பண்ணுங்க

விதை விதைத்திருக்கிறேன்.. வெயிட் பண்ணுங்க:

 Union Minister Mk Azhagiri Speaks On Traitors
Posted by:
: மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் துரோகிகளைப் பற்றி நீண்ட நேரம் பேசி மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்தப் பேச்சு பற்றி கூறுகையில், விதை விதைத்திருக்கிறேன்.. பொறுத்திருந்து பாருங்கள்" என்றும் அழகிரி சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.
மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க. அழகிரி, தி.மு.க. ஆட்சியிப் பொறுப்பில் இருந்தபோது என்னிடம் பதவிகளை கேட்டு பெற்றவர்கள் பலர். ஆனால் அப்படி பதவி பெற்ற பல கட்சி நிர்வாகிகள் என்னை விட்டு விலகிவிட்டனர். இத்தகைய துரோகத்தை பற்றி கவலைப்படவில்லை. நம்மால் பதவியில் உட்கார்ந்தவர்கள் மாமனார், மச்சான் மூலம் கிடைத்த சொத்து என்று சொல்லிக் கொண்டு திரிகின்றனர். மதுரையில் என்றைக்கும் நாம் தான்.... நம்மை மீறி யாரும் நடை போட முடியாது என்றார்.http://tamil.oneindia.in/

பின்னர் மதுரை செல்லூரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் வீட்டுக்குச் சென்ற மு.க. அழகிரி, சவுந்திரபாண்டியனின் தாயார் நாகம்மாள் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அங்கிருந்து வெளியே வந்த அழகிரியிடம் மதுரை 'துரோகிகள்' பற்றிய பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "இப்போது தான் விதை விதைத்துள்ளேன். பொறுத்திருந்து பாருங்கள்" என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டு கூறிச் சென்றார் அழகிரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக