ஞாயிறு, 23 டிசம்பர், 2012

Bhubaneswar ஒடிசாவில் நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண் பலாத்காரம்

டெல்லியில் ஓடும் பஸ்சில் கும்பலால் மருத்துவ கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த கண்டனத்துக்கு ஆளாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் கியோன்ஜ்ஹர் உள்ளிட்ட இருவேறு பகுதிகளில் கும்பலால் 19 மற்றும் 24 வயது பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. புவனேஸ்வரில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியது. நாட்டிய நிகழ்ச்சிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற போது இந்த கொடூரம் நடந்துள்ளது. இதில் ஜடாதாரி சாகு (50) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மற்றொரு சம்பவத்தில் கியோன்ஜ்ஹர் பகுதியில் 3 பேர் கும்பலால் கடாக்கை சேர்ந்த திருமணமான 24 வயது பெண் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். புகாரின் பேரில் இரு சம்பவங்களிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் ஒடிசா அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக