ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த முலாயம்சிங் யாதவ்?

கோட்டை விடலாமா முலாயம்சிங்?


தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு! _- இது இன்றைக்குச் சர்ச்சையாகி இருக்கிறது.
இந்தச் சர்ச்சைப் புயலைக் கிளப்பி இருப்பவர் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த முலாயம்சிங் யாதவ் என்று நினைக்கிறபோது வேதனை இரட்டிப்பாகிறது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள் என்று கேட்டி ருக்கலாம். ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தி இருக்கலாம்.
இந்தப் புத்திசாலித்தனம் ஏன் அவருக்குத் தோன்றவில்லை? நாடாளுமன்றம் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்றபோது அதில் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று கம்பீரமாகக் குரல் கொடுக்கத் தெரிந்தவருக்கு இந்தப் பிரச்சினையில் ஏன் அந்த அணுகுமுறை  தோன்ற வில்லை?
ஆத்திரம்! ஆம்! அரசியல் ஆத்திரம்!! உள்ளூர் அரசியல் ஆத்திரம்!! தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினையை செல்வி மாயாவதி கையில் எடுத்துக் கொண்டால் அதனை எந்த விலை கொடுத்தும் தடுத்தே தீர வேண்டும் என்ற தானே புயல் தடுமாறச் செய்திருக்கிறது.

இன்னொன்றை அவர் எண்ணிப் பார்க்க வேண்டாமா? நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான எண்ணிக்கை யில் வெற்றி பெற்றால் பிரதமர் நாற்காலி தன்னை நோக்கி நகரும் என்று நப்பாசை கொண்டுள்ளவர்கள் பட்டியலில் முலாயம் சிங்கும் இருக் கிறார் என்பது அரசியல் தெரிந்தவர் களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அப்படியே எடுத்துக் கொண்டாலும், இந்தியா முழுமையும் உள்ள கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக் களை எதிர்த்துக் கொண்டு, அதனைச் சாதித்திட இயலுமா? சமூகநீதியில் முலாயம் முன்னணி யில் இருக்கிறார் என்ற பரவலான எண்ணம் இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மலர்ந் தால் அல்லவா அந்த ஆசைக்குக் கணிசமான அர்த்தம் இருக்க முடியும்?
தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு என்னும் சட்டத் திருத்தம் 1995இல் நிறை வேற்றப்பட்டதே! 16(4ஏ) 73ஆவது சட்டத் திருத்தத்தின்போதே எழுப்பப் பட்ட பிரச்சினைதான் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது.
அன்றைய சமூக நலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி அதனைக் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டாரே, அடுத்து அதற்கான திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறினாரே - _ அதனை எடுத்துக்காட்டி, தாழ்த்தப்பட்டோருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடுக்குச் சட்டத் திருத்தம் கொண்டு வரும் நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கும் அதனை விரிவுபடுத்துங்கள் என்று குரல் கொடுத்திருந்தால் குமரி முதல் காஷ்மீர் வரை பேராதரவு அலை பொங்கி எழுந்திருக்குமே!
இந்தியா முழுமையும் உள்ள தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட் டோர் ஆகியோரின் ஒன்றுபட்ட ஆத ரவுக் குரல் ஓங்கி ஒலித்திருக்குமே!
நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்ட முலாயம் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ளும் முறை கூச்சத்தையல்லவா ஏற்படுத்தி விட்டது. எவ்வளவுப் பெரிய அனுபவக்காரர் _- ஆத்திரத்தில் அறிவைப் பலி கொடுத்து விட்டாரே! அரைக் கிணறு தாண்டி அரசியல் வாழ்வைப் பறி கொடுத்து விட்டாரே!
சமூக நீதிப் பிரச்சினையில் தாழ்த் தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் நாணயத்தின் இரு பக்கங்களாக, வலது _ இடது கரங்களாக, தோள்களாக இணைந்து நிமிர்ந்து நின்றால் கேட்டது கிடைக்காதா? நினைத்தது நடக்காதா? அவர்களோடு சிறுபான்மை மக்களையும் கையணைத்துக் கொண்டால் ஆட்சியே, அடியேன் வந்து நிற்கிறேன் -_ தங்கள் ஆணை என்று தலை தாழ்த்தி நிற்காதா?
இந்த மக்கள்தானே இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள்! பெரும் பான்மையினர் ஆள்வது என்பது தானே மக்கள் நாயகம்?
இன்றைய நிலை என்ன? முலாயம் சிங் மாத்திரமல்ல - சமூகநீதியில் அக் கறை உள்ள அனைத்து நெஞ்சங் களும் கண்களை அகல விரித்துக் கொஞ்சம் பார்க்கட்டுமே!
மத்திய அரசின் சமூக நலத்துறை 2011_-12 இன் அறிக்கை என்ன கூறு கிறது? 67 துறைகளில் பணியாற் றுவோர் பற்றிய வெள்ளை அறிக்கை என்று கூடக் கூறலாம். (அறிக்கை தனி காண்க)

இந்தப் புள்ளி விவரங்கள் என்ன பேசுகின்றன? மத்திய அரசுப் பணி களில் மிக உயர்ந்த பதவியான செய லாளர்கள் 102இல் இருவர் மட்டுமே பழங்குடியினர்; தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் யாரும் கிடை யாது கூடுதல் செயலாளர் பதவிகள் 113இல் தாழ்த்தப்பட்டோர் 5; பழங் குடியினர் ஒன்று, பிற்படுத்தப்பட்டோர் யாரும் இல்லை, கூட்டுச் செயலாளர் பதவி 453இல் தாழ்த்தப்பட்டோர் 32; பழங்குடியினர் 14, பிற்படுத்தப்பட்டோர் ஒரே ஒருவர். இயக்குநர்கள் 697 பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் 87, பழங்குடியினர் 37, பிற்படுத்தப்பட்டோர் 30. மாநிலங்களவையில் கேள்வி எண் 197_க்கு அமைச்சர் டாக்டர் சியான் பிரகாஷ் பிலானியா அளித்த புள்ளி விவரம் இது (6.12.2012).
அதேபோல குரூப் கி என்று சொல்லக் கூடிய பதவிகளில் தாழ்த்தப் பட்டோர் 11.5 சதவிகிதம், பழங்குடி யினர் 4.8 சதவிகிதம், பிற்படுத்தப் பட்டோர் 6.9 சதவிகிதம் குரூப் ஙி பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் 14.9 சதவிகிதம், பழங்குடியினர் 6 சதவி கிதம்; பிற்படுத்தப்பட்டோர் 7.3 சதவி கிதம் குரூப் சி -யில் தாழ்த்தப்பட்டோர் 17.5 சதவிகிதம், பழங்குடியினர் 7.6 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோர் 15.6 சதவிகிதம் ஒட்டு மொத்தமாக பார்த்தால் கி முதல் ஞி வரை பணிகளில் தாழ்த்தப் பட்டோர் 17.2 சதவிகிதம், பழங்குடியினர் 7.4 சதவிகிதம் பிற்படுத் தப்பட்டோர் 14.8 சதவிகிதம்.
மேற்கண்ட புள்ளி விவரங்களைப் பார்க்கும்பொழுது சட்டப்படி தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய  சதவிகிதத்தில் பணிகள் அளிக்கப்படவில்லை.
இன்னும் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத் திருக்கும் விகிதாசாரம்கூட பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை!
சட்டப்படி 27 சதவிகித வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத் திருக்க வேண்டும் _ கிடைக்க வில்லையே!
மத்திய அரசுத் துறைக்குச் சொந் தமான கல்வியில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு மூன்று ஆண்டுகளில் 27 விழுக்காடு எனும் உறுதியும் ஏட்டள வில்தான் உள்ளது.
நியாயமாக சமாஜ் வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங், ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலுபிரசாத் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரை யும் இணைத்துக் கொண்டு பிற்படுத் தப்பட்ட மக்களின் சமூகநீதிக்காகப் பெரும் குரல் கொடுத்திருக்க வேண்டுமே!
மானமிகு கலைஞர் அவர்களையும் நாடியிருந்தால் கை கொடுத்துத் தூக்கி விட்டிருப்பாரே!
சமூக நீதியில் பெரும் அக்கறை கொண்ட ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்களையும் இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சமூக நாடாளுமன்ற உறுப்பினர் களையும் ஒருங்கிணைத்து தங்களுக் குரிய சட்டப்படியான இடங்களைப் பெற்றிடத் தகுதி உள்ளவர்கள் ஒரு மூச்சு விட்டால் போதுமே -_ ஒரு நொடி யில் உரிய பங்கு ஓடி வந்து சலாம் வைக்குமே! பெரும் பதவிகளில் ஒடுக் கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் நிலையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்பது நியா யம்தான் என்பதை நிறுவ முடியுமே!
அதை விட்டுவிட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டுக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முலாயம்சிங் போன்றவர்கள் முட்டுக்கட்டை போட் டால், இவர்கள் விளங்கப் போவது எப்பொழுது?
தாழ்த்தப்பட்டவர்களைப் புறந்தள்ளி பிற்படுத்தப்பட்டோர் உரிமை என்பது முயற்கொம்பே!
பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது என்று தந்தை பெரியார் சொன்னாரே _- அதனையொத்தது இது!
தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய விகிதாசாரத்தை எந்த நிலையிலும் பிற்படுத்தப்பட்டோர் எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல பிற்படுத்தப்பட்ட வர்களுக்குரிய இடங்களைத் தாழ்த்தப் பட்டோரும் தட்டிப் பறித்திட முடி யாது. சட்டங்களும், விதிகளும் இவ்வளவு கறாராக இருக்கும்போது இந்த இரண்டு கரங்கள் இணைவதில் என்ன தயக்கம்? என்ன குழப்பம்? சிந்திப்பீர்! செயல்படுவீர்!!
- கவிஞர் கலி. பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக