புதன், 19 டிசம்பர், 2012

7 லட்சம் கோடி கருப்புப்பணம் வெளிநாட்டில் பதுக்கல்

மும்பை :கடந்த 2001 முதல் 2010 வரையிலான, 10 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து, 12,300 கோடி டாலர் (7 லட்சம் கோடி ரூபாய்) கறுப்பு பணம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வளரும் நாடுகள் இதுகுறித்து, அமெரிக்காவை சேர்ந்த குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் விவரம்:வளரும் நாடுகளில் உள்ள கறுப்பு பணம், சட்டவிரோதமாக வளர்ந்த நாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதனால், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.இந்நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு, இத்தகைய செயல்பாடு தடையாக உள்ளது.இந்த வகையில், இந்தியாவில் இருந்து, 10 ஆண்டுகளில், 12,300 கோடி டாலர் கறுப்பு பணம், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது. கட்டமைப்பு துறை:இதில், 10 ஆயிரம் கோடி டாலருக்கும் அதிகமான தொகை, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்கு பயன்பட்டிருக்க வேண்டும்.மேலும், குறிப்பிட்ட தொகை இந்தியாவிலேயே இருந்திருந்தால், தேசிய மின் தொகுப்பு துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால், கடந்த ஆண்டு தேசிய அளவில் ஏற்பட்ட மின்தடை பிரச்னைகள், இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்காது.அண்மை காலங்களில், இந்தியா முன்னேற்றம் கண்டு உள்ளது. எனினும், சட்டவிரோதமாக வெளியேறும் நிதியால், இந்தியா தொடர்ந்து மிகப் பெரிய அளவிலான செல்வத்தை இழந்து வருகிறது.இந்தியாவில் இருந்து, ஏற்கனவே வெளியேறி விட்ட கறுப்பு பணத்தை மீட்பதற்கு தான், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. கறுப்பு பணம் உள்ளவரை இது தொடரும். அரசியல் கொள்கைகளை உருவாக்குவோரும், விமர்சிப்போரும், நாட்டில் இருந்து வெளியேறும் கறுப்பு பணத்தை தடுப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்.



சுணக்க நிலை:  7 லட்சம் கோடி கருப்புப்பணம் வெளிநாட்டில் பதுக்கல் 
கடந்த 2010ம் ஆண்டு, அனைத்து வளரும் நாடுகளில் இருந்தும், 85,880 கோடி டாலர் கறுப்பு பணம், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.இது, 2008ம் ஆண்டில், அமெரிக்க பொருளாதார சுணக்க நிலைக்கு, முன்பான, மிக உயர்ந்த பட்ச தொகையை (87,130 கோடி டாலர்) விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.வளரும் நாடுகளை பொறுத்தவரை, அதிக அளவில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் இழந்ததில், சீனா முதலிடத்தில் உள்ளது. இந்நாடு, மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 10 ஆண்டுகளில், 27.4 லட்சம் கோடி டாலரை இழந்துள்ளது.


பிலிப்பைன்ஸ்:
அடுத்த இடங்களில், மெக்சிகோ (47,600 கோடி டாலர்), சவுதி அரேபியா (20,100 கோடி டாலர்), ரஷ்யா (15,200 கோடி டாலர்), பிலிப்பைன்ஸ் (13,800 கோடி ரூபாய்), நைஜீரியா (12,900 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.இந்த பட்டியலில், இந்தியா (12,300 கோடி டாலர்) எட்டாவது இடத்தில் உள்ளது.

- நமது டில்லி நிருபர் - http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக