ஞாயிறு, 16 டிசம்பர், 2012

பெஷாவரில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி : 50 பேர் படுகாயம்

பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தி்ல் 7 பேர் பலியாயினர். 50பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் பற்றிய விபரம் வருமாறு: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பெஷாவரில் உள்ள விமான நிலையம் மீது தீவிரவாதிகள் ராக்கெட் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டினர். இரு தரப்பினரிடையே தொடர்ந்து பயங்கர மோதல் நடைபெற்றது. இச்சம்‌பவத்தில் தாக்குதல் நடத்திய ஐந்து பேர் பலியாயினர் என கைபர் மாகாணத்தை சேர்ந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இப்திகார் ஹூசைன் தெரிவி்த்தார்.

மேலும் அவர் கூறுகையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முதல் ராக்கெட் குண்டு விமான ஓடுதளத்திலும் மற்றொன்று வெளிப்பகுதியிலும் வெடித்தது என கறினார். மேலும் காயமடைந்தவர்கள் விமான நிலையம் அருகே உள்ள கைபர் டீச்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நி‌லமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து விமான நிலைம் பாகிஸ்தானின் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது  http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக