ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சத்துணவில் பாலையும் சேர்க்க வேண்டும்!

சத்துணவில் பாலையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக பால் உற்பத்தியாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சேலத்தில் செங்கோட்டுவேல் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசும்பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 20ல் இருந்து ரூபாய் 25ஆக உயர்த்திதர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் விலையை ரூபாய் 28ல் இருந்து ரூபாய் 35ஆக உயர்த்தர வேண்டும் என்றும், கலப்பு தீவனத்தை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் பால் உற்பத்தியாளரின் நலனை உயர்த்த சத்துணவில் பாலையும் சேர்க்க வேண்டும், மேலும் கலப்பு தீவனவிலை 50 சதவீதம் அதிகரித்துள்ளதால் பால் விலையை உயர்த்தி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக