வியாழன், 1 நவம்பர், 2012

Toronto இளையாராஜா இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டள்ளது


தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடுமையான புயலினால் இளையாராஜாவின் ரொறான்ரோ இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டள்ளது: http://www.trinityeventsonline.com/
எதிர்பாராத விதமாக சென்னையில் வீசிய கடும் புயலின் விளைவால் நவம்பர் 3 ஆம் திகதி ரொறான்ரோவில் நடைபெற இருந்த “எங்கேயும் எப்போதும் ராஜா” இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டள்ளது என்பதை டிரினிட்டி ஈவண்ட்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. சென்னையைத் தாக்கிய நீலம் புயலால் விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது. இந்த எதிர்பாராத நிகழ்வுகளினால் கனடா நிகழ்ச்சியில் பங்கு பெற இருந்த கலைஞர்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு விட்டது.
ரசிகர்களிடமும், எங்களது வாடிக்கையாளர்களிடமும் இந்த மாற்றத்தினால் ஏற்படும் சங்கடங்களுக்காக மனப்பூர்வமான வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மறு திகதியை விரைவில் அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது வாங்கப்பட்ட நுழைவுச் சீட்டுக்கள் புதிய திகதியில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பற்றிய மேலதிக தகவல்கள் விரைவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக