வியாழன், 1 நவம்பர், 2012

ஜாமீனில் வெளியில் வந்த பொன்முடி மீண்டும் கைது

திருச்சி: செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக திருச்சி சிறையில் அடைக்கபட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி ஜாமீனில் வெளியில் வந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டார்
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம் உள்ளிட்ட 5 பேர் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 6ம் தேதி விழுப்புரத்தில் பொன்முடி கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்முடிக்கு செம்மண் குவாரி வழக்கில் ஜாமீன் கிடைத்தது.
இருப்பினும் சொத்துகுவிப்பு வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த பொன்முடியை சிறை வாசலில் காத்திருந்த விழுப்புரம் போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொன்முடியை கைது செய்து அழைத்து சென்றனர்.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக