வியாழன், 1 நவம்பர், 2012

பாடும் போது கதறி அழுதார் சின்மயி

கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’.நந்தனம் படத்திற்கு இசையமைக்க மலையாள இசையமைப்பாளாரான கோபி சந்தர் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் ஷியாமளன். சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி சந்தர் தான் இசையமைப்பாளர். உஸ்தாத் தோட்டம் படம் பாடல்களுக்காகவே ரசிகர்களை இழுக்கும் அளவிற்கு ஹிட் ஆனதால் கோபி சந்தரின் இசையை கேட்க பலரும் ஆவலாக இருந்த நிலையில் பிண்ணனி பாடகி சின்மயி கோபி சந்தரின் இசையில் நந்தனம் படத்திற்காக பாடல் பாடும் போது அழுதுகொண்டே பாடினாராம்.இது என்ன வலியோ’ என்ற பாடல் வரிகளை கோபி சந்தரின் இசையுடன் சேர்த்து பாடும் போது உண்டான தாக்கத்தால் கதறி அழுதாராம் சின்மயி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக