சனி, 3 நவம்பர், 2012

இந்து, கிறிஸ்தவர்களுக்காக வாதாடும் பாகிஸ்தான் சமூக சேவகி மீது சரமாரி துப்பாக்கிச் சூடு

 Marvi Sirmed

Unidentified gunmen on Thursday attacked prominent rights activist Marvi Sirmed, who has received threats from extremist groups several times in the past, in the Pakistani capital though she escaped unharmed.
The gunmen, who were in a black car, fired at Sirmed's vehicle at Murree Road near Bani Gala on the outskirts of Islamabad while she was returning home from work this evening.
"They tried to target us twice and fired several shots at my car which missed. Luckily, my driver sped away and we escaped," Sirmed told PTI.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரபல சமூக சேவகி மீது மர்ம ஆசாமிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் புறநகரில் வசிப்பவர் மார்வி சிர்ம்ட். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்துக்கா கவும் வாதாடி வருகிறார். குறிப்பாக ஷியா முஸ்லிம் பிரிவினர், இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு முழு உரிமை கேட்டு போராடி வருகிறார். மேலும், இந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதை கடுமையாக எதிர்த்து வருகிறார் மார்வி.
இதனால், இந்தியாவுக்கு ஆதரவானவர் என்று கூறி தீவிரவாதிகள் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஏற்கனவே பல முறை மார்வியை கொல்ல முயற்சி செய்தனர். இந்நிலையில், இஸ்லாமாபாத் புறநகர் பனிகலா பகுதியில் முர்ரி சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது நேற்று மர்ம ஆசாமிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் மார்வி. இது குறித்து அவர் கூறுகையில், Ôகார் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ஆனால், டிரைவர் காரை வேகமாக ஓட்டி சென்றார். அதனால் உயிர் பிழைத்தேன்Õ என்றார். இதையடுத்து மார்வி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும், துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் உத்தரவிட்டுள்ளார். http://www.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக