ஞாயிறு, 4 நவம்பர், 2012

தே.மு.தி.க விலிருந்து 15 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வர தீவிரம்

நான்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களை ஆளும் கட்சி வளைத்த பின்னணி இந்த உடைப்பு அசைன் மெண்ட்டில் தீவிரமாக உள்ள அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் டீமிடம் பேசிய ஜெ., புதிய திட்டம் ஒன்றையும் வகுத்துக் கொடுத்துள்ளாராம். தே.மு. தி.க.விலிருந்து குறைந்தது 15 எம்.எல்.ஏ.க்களையாவது வெளியே கொண்டு வரவேண்டும். அவர்கள் ஒன்று சேர்ந்து "நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க.' என்று சொல்லி விஜயகாந்த்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அத்துடன், "முரசு சின்னம் எங்களுக்குத்தான்' என்று அவர்கள் உரிமை கோர வேண்டும். விஜயகாந்த்தும் அதே உரிமையைக் கேட் பார். வழக்கு நீதிமன்றத்திற்குப் போகும். இருதரப்பும் முரசு சின்னத்தை கேட்கும்போது நீதிமன்றம் அதற்குத் தடை விதிக்கும். எம்.பி. தேர்தலில் விஜயகாந்த் கட்சி, முரசு சின்னம் இல்லாமல் தவிக்கும் என்பதுதான் அ.தி.மு.க. தலைமையின் திட்டமாம்.ஜெயலலிதாவா? விஜயகாந்த்தா? என்ற ஃபைட்டில் தமிழக அரசியல் களம் விறுவிறுப் படைந்துள்ளது. தனது கட்சியை உடைக்கும் ஜெ.வுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஓரணியாகத் திரட்ட நினைக்கும் விஜயகாந்த், இது தொடர்பாக கலைஞர் உள்பட எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க ரெடியாகி வருகிறாராம்நல்லதை மறைத்த நால்வர் அணி! நான்கு பேரும் திசை மாறுவதற்குக் காரணமே கட்சிக்குள் இருந்த நால்வர் அணிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., கொறடா சந்திரகுமார், மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், விஜயகாந்த்தின் பி.ஏ.பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரை மீறி, கட்சியில் எதுவுமே நடக்காது. அவர்கள் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது.
ராமு வசந்தன் பொதுச்செயலாளராக இருந்த வரை எல்லாப் பிரச்னைகளையும் அவர் பார்த்துக்கொண்டார். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் குறைகளை கேப்டனிடம் கொண்டு போனார். அவர் மறைவுக்குப்பிறகு, இந்த நான்கு பேரும் கேப்டனை சுற்றிக் கொண்டனர். மக்கள் பிரச்னை என்றால் வீதிக்கு வருவதுதான் கேப்டனின் ஸ்டைல். பெசன்ட் நகரில் குடிசைகள் எரிந்தபோது ஓடிப்போய்ப் பார்த்தார். திண்டிவனம் வெடிவிபத்து நடந்த நேரத்தில் உடனே சென்னையில் இருந்து கிளம்பிப் போனார். புயல், வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் அம்பத்தூரில் வெள்ள நீரில் நடந்து பார்வையிட்டார். இதெல்லாம் ராமு வசந்தன் இருந்த வரை நடந்தது. ஆனால், இப்போது கேப்டனை எங்கேயும் போகவிடாமல் இந்த நான்கு பேரும் தடுத்து வைத்திருக்கிறார்கள். 'நீங்கள்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். அதனால் அடிக்கடி உங்கள் முகத்தை மக்களிடம் காட்ட வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து வைத்திருக்கிறார்கள்.
கேப்டன் வெளியே வந்தால் நிர்வாகிகளிடம் பேசுவார், அதனால் தங்களின் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று கணக்குப் போட்டுதான் இப்படி நடக் கிறார்களாம். கட்சியின் பிரச்னைகள், புகார்கள் எதுவும் இவர்களை மீறி கேப்டனிடம் போகாது. அதனால் எல்லா மாவட்டச் செயலாளர்களும் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளரைப்பற்றி எந்தப் புகாரும் விஜயகாந்த்தின் பார்வைக்குக் கொண்டுபோகாமல் பார்த்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் வைத்தால் வர முடியாமல் போனாலும் போனில் வாழ்த்துச் சொல்வார். இப்போது நிர்வாகிகள் கேப்டனுடன் போட்டோ எடுக்கக்கூட முடிவது இல்லை. அந்த அளவுக்கு தொண்டர்களை விட்டு விலகி இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இந்த நால்வர்தான். Thanks Vikatan

Sent by Rajan Madhurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக