வெள்ளி, 23 நவம்பர், 2012

நிர்வாக சீர்கேடுகளால் செம்மொழி நிறுவன பணிகள் தேக்கம்

நிர்வாக சீர்கேடுகளால், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், தமிழ் மொழி வளர்ச்சி பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கு தீர்வை எட்ட, முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.செம்மொழி தமிழாய்வை வளர்க்கும் நோக்கதோடு, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சென்னையில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, 2007ம் ஆண்டு நிறுவியது.
ஐம்பெருங்குழு:கி.பி.600க்கு முந்தைய காலத்தை, செவ்வியல் காலமாக கொண்டு, பண்டைய தமிழ் சமூகம் பற்றிய தகவல்களை, ஆவணப்படுத்துவதையும், பாதுகாப்பதையும், இந்நிறுவனம் செய்து வருகிறது.  http://www.dinamalar.com/
மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிறுவனத்தின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்த, "ஐம்பெருங்குழு, எண்பேராயம்' அடங்கிய உயர்நிலை குழுவை அமைத்துள்ளது.பல்துறை சார்ந்த அறிஞர்களை ஒருங்கிணைத்து, தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல், தமிழ் பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆராய்தல், பண்டைய தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளை குறும்படங்களாக உருவாக்குதல் ஆகிய பணிகளை, இந்நிறுவனம் செய்யவேண்டும்.

பன்னாட்டு அறிஞர்:@மலும், இணையவழி செம்மொழி தமிழ் கற்பித்தல், உலக அளவில் ஆய்வு களங்களை உருவாக்கி, பன்னாட்டு அறிஞர்களை ஆய்வில் ஈடுபடுத்துதல், பழந்தமிழ் நூல்களை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும், மொழி பெயர்த்து வெளியிட நிதி வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும், இந்நிறுவனம் @மற்கொள்ள வரையறை செய்யப்பட்டது. ஆனால், ‌‌செம்மொழி நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளால், தமிழ் மொழி வளர்ச்சி பணிகள் கிடப்பில் @பாடப்பட்டுள்ளதாக, தமிழ் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அறிஞர்கள் இல்லை:இதுகுறித்து, தமிழ் ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:செம்மொழி நிறுவனம் துவங்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், இரண்டு கட்டுரைகள், ஏழு புத்தகங்கள் மட்டுமே, வெளியாகியுள்ளன. சரியான ஆய்வு அறிஞர்கள் இல்லாத காரணத்தால், செவ்வியல் நூல்களின் சொல்லடைவு, செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு, செவ்வியல் நூல்களின் தொடரடைவு உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.செம்மொழி நிறுவன செயல்பாடுகள் அடங்கிய செய்தி மடல், ஓராண்டாக வெளிவரவில்லை. ஆய்வு திட்ட அறிக்கைக்கு கொடுக்கப்படும் தொகை, பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு கொடுக்கப்படும் தொகையும் குறைக்கப்பட்டு உள்ளது.

செயல்பாடுகள் குறைந்த காரணத்தால், செம்மொழி நிறுவனத்தின் திட்டத்திற்கும், செயல்பாட்டிற்கும், மத்திய அரசு தந்த, பல கோடி ரூபாய் நிதி, செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டது.செம்மொழி தமிழாய்வில், குறிப்பிடத்தக்க பங்களிப்பு தந்தோருக்கு, இரண்டாண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை. ஆய்வு அறிஞர், முதுநிலை ஆய்வு அறிஞர் உள்ளிட்டோர், நிறுவன வேலைகளில் ஈடுபடாமல், தங்களுடைய புத்தகம் வெளியிடுதல், இதழ்கள் நடத்துதல் என, சொந்த வேலைகளை மேற்கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பயிலரங்கம்:இதுகுறித்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் ஞானமூர்த்தி கூறியதாவது:செம்மொழி நிறுவன செய்தி மடல், தற்காலிகமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது, நூல்களை வெளியிடுகிறோம். நிறுவனம் சார்பில் நடக்கும் பயிலரங்கம், கருத்தரங்குகளுக்கு வழங்கும் தொகை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்தொகையை, முழுமையாக பயன்படுத்த முடியாமல், 10 சதவீதம் தொகையை நிகழ்ச்சி நடத்துவோர், திருப்பிக் கொடுக்கின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன், விருதுக்கான அறிஞர்கள் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பதிலளிக்கும் பட்சத்தில், விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு, ஞானமூர்த்தி கூறினார்.செம்மொழி நிறுவனத்திற்கு, மாநில முதல்வர் என்ற முறையில், தலைவர் பொறுப்பில் உள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நிர்வாக சீர்கேடுகளை களைந்து, செம்மொழி நிறுவன மறுமலர்ச்சி பணிகளை ஆற்ற உதவ வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக