வெள்ளி, 23 நவம்பர், 2012

Easy jet விமானப் பணிப் பெண் திரும்பிப் பார்க்காமல் நகர முயன்றார்.

Viruvirupu
“கையை தொடாதீர்கள்”
பிரிட்டிஷ் பெண் ஒருவர் easyJet airlines விமானத்தின் விமானப் பணிப்பெண்ணின் கையை பிடித்து முறுக்கினார் என்ற குற்றச்சாட்டில், வாழ்நாள் முழுவதும் அந்த airlines விமானங்களில் பயணி்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரைக் கேட்டால், விமானப் பணிப்பெண்ணின் கையை சும்மா தொட்டேன். அவ்வளவுதான் என்கிறார்.

எப்படியோ, பிரிட்டனில் இருந்து ஸ்பெயினுக்கு vacation சென்ற பெண்மணி, பிரிட்டன் திரும்ப முடியாமல் ஸ்பெயினில் ஒரு நாள் முழுவதும் தங்கி, மறுநாள்தான் திரும்ப முடிந்திருக்கிறது.
ஜானெட் கிர்பி என்ற பிரிட்டிஷ் பெண், Spain நாட்டின் Murcia airportல் விமானம் ஏற கியூ வரிசையில் நின்றபோதே சம்பவம் நடந்துள்ளது. இவர் கையில் வைத்திருந்த பேக் விமானத்துக்குள் எடுத்துச் செல்லப்பட முடியாத அளவில் பெரிதாக உள்ளது என விமானப் பணிப்பெண் கூறி, பேக்கை செக்-இன் செய்யுமாறு கூறியிருக்கிறார். ஜானெட் கிர்பி மறுத்திருக்கிறார்.
“இந்த பேக்குடன் பயணம் செய்ய முடியாது. அப்புறம் உங்க இஷ்டம்” என்று கூறிய விமானப் பணிப்பெண் மற்றைய பயணிகளை கவனிக்க செல்ல முயலவே, அவர் அங்கிருந்து அகலாமல் தடுப்பதற்கு விமானப் பணிப்பெண்ணின் கையை எட்டிப் பிடித்தார் இவர்.
“நீங்கள் என்னை எப்படி தொட முடியும்? உங்க பயணம் கேன்சல்” என்ற விமானப் பணிப்பெண் செக்யூரிடியை அழைத்து, ஜானெட் கிர்பியை அங்கிருந்து அகற்றும்படி கூறிவிட்டார். பின்னர் விமானப் பணிப்பெண் கொடுத்த ரிப்போர்ட்டில், “பயணி எனது கையை பிடித்து முறுக்கி இழுத்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து easyJet airlines, ஜானெட் கிர்பி தமது விமானங்களில் வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளார் என அறிவித்து விட்டது. அவரது பெயர், விமான நிறுவன கம்ப்யூடட்டர் சிஸ்டத்தில் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது. அதன் அர்த்தம் அவரது பெயரில் (அதே பிறந்த தேதியுடன்) டிக்கெட் புக்பண்ண சிஸ்டம் அனுமதிக்காது.
மறுநாள் போட்டி ஏர்லைனான Ryanair மூலம் பிரிட்டன் திரும்பியுள்ள ஜானெட் கிர்பி, “விமானப் பணிப் பெண்ணை அழைத்துப் பார்த்தேன். அவர் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து நகர முயன்றார். அதையடுத்து, அவரது கவனத்தை என் பக்கம் திருப்ப கையை தொட்டேன்” என்கிறார்.
விவகாரம் கோர்ட் வரை போகும் போலிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக