வெள்ளி, 23 நவம்பர், 2012

கம்யூட்டர் விற்பனை சரிவு Laptop Tablet அதிகளவு விற்பனை

லேப்டாப், டேப்லேட் மீது அதிகளவு மோகம்: கம்யூட்டர் விற்பனை சரிவு
நடப்பாண்டில் 3ம் காலாண்டில் இந்தியாவில் கம்யூட்டர் விற்பனை 5.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.
ஐ.டி.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி இந்தியாவில் நடப்பாண்டில் கம்யூட்டர் விற்பனை 2.99 மில்லியனாக உள்ளது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தோடு ஒப்பிடும்போது இது 5.4 சதவீதம் சரிவாகும். அதேசமயம், முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது இது 4.9 சதவீதம் உயர்வாகும். இன்றைய தொழில்நுட்பத்தில் மக்கள் பெரும்பாலும் லேப்டாப், டேப்லேட் ஆகியவைகள் மீது அதிகளவு மோகம் கொண்டுள்ளதால் கம்யூட்டர்களின் விற்பனை சரிவடைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக