வியாழன், 1 நவம்பர், 2012

துப்பாக்கிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி: கஜோலுக்காக பணம் போட்டார் விஜய்!


Viruvirupu
தீபாவளி ரிலீஸூக்காக வேகமாக தயாராகிவரும் துப்பாக்கியின் ‘திரைமறைவு தயாரிப்பாளர்’ விஜய்தான் என்பதாக ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் பரவலாக அடிபடுகிறது. துப்பாக்கியின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு என்று தெரிந்த நிலையிலும், இந்த பேச்சு ஓயவில்லை.
காரணம், கலைப்புலி தாணுவே, “இந்த ப்ராஜெக்ட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், கை கொடுத்தவர் விஜய்” என்று கூறியதுதான். தாம் கொடுத்த பணத்தை, தயாரிப்பில் பங்கு என்ற வகையில் கொடுத்தார் என்கிறார்கள், கோடம்பாக்கம் பைனான்ஸ் புள்ளிகள் சிலர்.

ஆனால், விஜய் தரப்பு இதை மறுக்கிறது. “விஜய் தயாரிப்பாளராக வேண்டுமானால், அவரே ‘முழு தயாரிப்பாளராக’ முடியும். அப்படி இருக்கையில், துப்பாக்கி தயாரிப்பில், நிழல் தயாரிப்பாளராக ஏன் அவர் இணைகிறார்?” என்பது அவர்களது வாதம்.
துப்பாக்கி ப்ராஜெக்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது நிஜம். அதுவும் கஜல் அகர்வால் கொடுத்த கால்ஜீட் தேதிகளில் ஷூட்டிங் நடத்த முடியாத அளவுக்கு பணம் டைட் ஆன நாட்களும் உண்டு. குறித்த தேதிகளில் ஷூட்டிங் வைக்காவிட்டால், மீண்டும் கஜல் அகர்வாலின் கால்ஷீட் எப்போது கிடைக்கும் என்று தெரியாத நிலையில், படத்தில் ரிலீஸ் தீபாவளிக்கு இருக்காது என்ற நிலை ஏற்பட்டது.
படத்தை தீபாவளியன்று திரைக்கு கொண்டுவர, யாராவது பண உதவி செய்தேயாக வேண்டும் என்ற நிலையில், ஹீரோ விஜய் பண உதவி செய்தார் என்பதுதான் நிஜ கதை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக