வியாழன், 1 நவம்பர், 2012

9 வருடமாக இழுத்து வந்த ஆபாசப் பட வழக்கிலிருந்து ஷகீலா ஒரு வழியாக விடுதலை

Shakeela Gets Freedom After 9 Years
நெல்லை: ஆபாசப் படத்தில் நடித்ததாக நெல்லை மாவட்ட கோர்ட்டில் கடந்த 9 வருடமாக இழுபறியாக இருந்து வந்த வழக்கிலிருந்து கவர்ச்சி நடிகை ஷகீலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போலீஸார் ரெய்டு போனார்கள். அங்கு அப்போது ஒரு மலையாளப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சோதனையின்போது சென்சார் போர்டின் அனுமதி பெறாத ஆபாசக் காட்சிகள் அடங்கிய படச்சுருளை போலீஸார் கைப்பற்றினர். அதில் ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து ஷகீலா, தினேஷ், தியேட்டர் மேலாளர் பாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பாஸ்கர் தப்பி விட்டார். மற்ற 9 பேரும் கைது செய்யப்பட்டு நெல்லை குற்றவியல் முதலாவது கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
கடந்த 9 வருடமாக இந்த வழக்கு இழுத்துக் கொண்டிருந்தது. விசாரணைக்காக சில முறை ஷகீலா கோர்ட்டுக்கு வந்துள்ளார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராமலிங்கம் நேற்று தீர்ப்பை அளித்தார். தீர்ப்பையொட்டி ஷகீலா, தினேஷ் உள்ளிட்ட 9 பேரும் வந்திருந்தனர். அப்போது அனைவரையும் விடுதலை செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சந்தோஷத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி கோர்ட்டை விட்டுக் கிளம்பிச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக