புதன், 7 நவம்பர், 2012

லதா மங்கேஷேகர் எனது கணவரின் கள்ளக்காதலி

Lata Mangeshkar Had An Affair With Bhupen புபென் ஹசாரிகாவின் மாஜி மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மறைந்த பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான புபென் ஹசாரிகாவுடன் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு தொடர்பு இருந்ததாக ஹசாரிகாவின் முன்னாள் மனைவி பிரியம்வதா பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபலமாக இருந்து மறைந்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகரும், இசையமைப்பாளருமான புபென் ஹசாரிகா. அவரது முதலாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அவரது முன்னாள் மனைவி பிரியம்வதா பட்டேல் கலந்து கொண்டார

அவர் அஸ்ஸாம் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், பாடகி லதா மங்கேஷ்கருக்கும், புபென் ஹசாரிகாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததால் தான் திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து அவரைப் பிரிந்ததாகத் தெரிவித்துள்ளார். அவரின் குற்றச்சாட்டு மங்கேஷ்கர் குடும்பத்தாரையும், ஹசாரிகாவுடன் 40 ஆண்டுகளாக இருந்த கல்பனா லாஜ்மியையும் எரிச்சலடைய வைத்துள்ளது.
அந்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்,
லதா எப்பொழுது கொல்கத்தா வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வருவார். அப்படி வந்தால் அவரும், ஹசாரிகாவும் இரவு முழுவதும் ஒரே படுக்கையறையில் தான் இருப்பார்கள். லதாவுக்கு அவர் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு இசைக்கலைஞன் முன்னுக்கு வர வேண்டும் என்றால் அவனுடைய பாடல்களை லதா மங்கேஷ்கர் பாட வேண்டும் என்று என் கணவர் ஒரு முறை கூறினார் என்றார்.
ஹசாரிகா வாழ்வில் மும்பையைச் .சேர்ந்த ஒரு பெரிய பிரபலம் இருந்தது அஸ்ஸாம் மாநில மக்களில் பலருக்கு தெரியும். ஆனால் அது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. ஹசாரிகா தனது சுயரசரிதையில் தனது வாழ்வில் உள்ள இன்னொரு பெண்ணைப் பற்றி எழுதியிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக