புதன், 7 நவம்பர், 2012

நக்கீரன் ஆசிரியர் மீது சசிகலா அண்ணன் தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!

தஞ்சை நடுவர் மன்ற நீதிபதி உத்தரவு!
  2001ஆம் ஆண்டு நக்கீரன் இதழில் சசிகலா அண்ணன் சுந்தரவரதன், அவரது மனைவி சந்தான லட்சுமி ஆகியோர் அதிமுகவினரிடம் கட்சிப் பதவிக்காக பணம் வசூலிப்பதாகவும், தனது மருமகன் டிடிவி தினகரனை முதல்வராக்குவதற்காக சிறப்பு யாகம் நடத்துவதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி அவதூறானது என்று கூறி, சசிகலா அண்ணன், தஞ்சை நடுவர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நக்கீரன் சார்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள், தஞ்சை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், கும்பகோணம் வழக்கறிஞர் எம்.முரளி ஆகியோர் ஆஜராகி வந்தனர். http://www.nakkheeran.in/


நமது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களையும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டி காட்டி கடந்த காலத்தில் அதிமுகவில் வலிமைமிக்கவராக இருந்ததையும், அவரை பற்றி நக்கீரனில் வெளியான செய்தி அவதூறானது அல்ல என்பதையும் பல தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதாடினர். மேலும், இதுபோன்ற வழக்கு பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.
நமது வாதங்களை ஏற்றுக்கொண்ட தஞ்சை முதலாவது நடுவர் மன்ற நீதிபதி மாலதி அவர்கள், இன்று (07.11.2012) வழக்கில் இருந்து நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களையும், இணையாசிரியர் காமராஜ் அவர்களையும் விடுவித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக