திங்கள், 12 நவம்பர், 2012

யோகா குரு ராம் தேவ் 5 கோடி.. வருமான வரித்துறை நோட்டீஸ்

ரூ. 5 கோடி வரிப்பணம் கட்ட யோகா குரு ராம் தேவ் நிறுனத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

வரி ஏய்ப்பு தொடர்பாக 5 கோடி ரூபாய் அபராதம் கட்ட யோகா குரு பாபா ராம்தேவ் அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் ஆகியவை சார்பாக ஹரித்துவாரில் நடத்தப்பட்ட சிவ்ரிஸ் யோகா முகாம்களில் கலந்துகொண்டவர்களிடம் வியாபார நோக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதில் 5.14 கோடி ரூபாய் சேவை வரி கட்டுவதிலிருந்து இந்நிறுவனம் நழுவியுள்ளது என்றும், அதை உடனடியாக கட்ட வேண்டுமெனவும் கூறி மத்திய ஆயத்தீர்வை புலனாய்வு இயக்குனரகம் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது 2007 -2008 மற்றும் 2011-2012 காலகட்டத்தின்போது நடந்த முகாம்களின் போது கட்டப்பட வேண்டிய சேவை வரித்தொகை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.http://www.nakkheeran.in/
ஆனால் பாதி அல்லது முழு நேரமாக நடத்தப்பட்ட யோகா முகாம்களில் கலந்துகொண்டவர்களிடமிருந்து அன்பளிப்பாக பணம் பெறப்பட்டுள்ளதற்கான ஆதரங்களுடன் கூடிய நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் யோக குரு பாபா ராம்தேவின் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வரிவிதி விலக்கை நிதி அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்ற செய்தியும் நோட்டீசில் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவ உதவிகளுக்காக அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் நடவடிக்கைகளுக்காக வரி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் எதையும் நாங்கள் மறைக்கத் தேவையில்லை என்று ராம்தேவின் செய்தித் தொடர்பாளார் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக